என்னம்மா ஆனாலும் நீங்க இப்டி பண்றீங்க! ஃபோட்டோ எடுக்க வேற எடமே கெடைக்கலையா?

இது சாகசம் தான். ஆனால் இவரை பார்த்து நான்கு பேர் இதனை முயற்சித்தால் என்ன ஆவது? கொஞ்சமாவது பொறுப்பு வேணும்.

இது சாகசம் தான். ஆனால் இவரை பார்த்து நான்கு பேர் இதனை முயற்சித்தால் என்ன ஆவது? கொஞ்சமாவது பொறுப்பு வேணும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trending Viral Video of woman posing at the edge of 3000 feet cliff

Trending Viral Video of woman posing at the edge of 3000 feet cliff

Trending Viral Video of woman posing at the edge of 3000 feet cliff : நமக்கு இந்த செல்ஃபோனும் கேமராவும் வந்த பின்பு தலைகால் புரிவதில்லை. ஓடிக் கொண்டிருக்கும் வண்டியில் இருந்து செல்ஃபி எடுப்பது,  ரயிலின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில் தண்டவாளங்கள் முன்பு நின்று கொண்டு ரயில் வரும் செல்ஃபி எடுப்பது, பாறைகளின் உச்சியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்வது என தினம் தினம் சில 'நட் கேஸ்களை’ நாம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.

Advertisment

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

சவால்களை, துணிச்சலை எதிர்க் கொண்டு சாதிப்பதும் ,அதில் கிடைக்கும் த்ரில்லை ரசிப்பதும் ஒரு வகையில் மகிழ்ச்சி தான். பம்ங்கி ஜம்ப், ட்ரெக்கிங், மௌன்ட்டெய்னரிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் எல்லாம் இவ்வகையறா தான். ஆனால் முறையான பாதுகாப்பு கவசங்கள் இருந்தும் கூட சில நேரங்களில் கோளாறு காரணமாக ஆபத்துகளும், விபத்துகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. ஆனால் இங்கே இந்த வீடியோவில் வரும் பெண்ணை பாருங்கள். இருப்பதோ 3000 அடிகள் உயரம் கொண்ட மலையின் உச்சியில். பிடிமானத்திற்கும் ஒன்றும் இல்லை. கயிறுகளால் கட்டப்பட்ட பாதுகாப்பான க்ளிப்களும் இல்லை. வெறுமனே இரண்டு கைகளையும் தூக்கி ஹாய் என்ற படி ஜாலியாக கத்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

இது சாகசம் தான். ஆனால் இவரை பார்த்து நான்கு பேர் இதனை முயற்சித்தால் என்ன ஆவது? கொஞ்சமாவது பொறுப்பு வேணும் என இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த பெண்ணின் செயலுக்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இந்த பெண்ணின் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

மேலும் படிக்க : அடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு! என் புத்திய…

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: