மக்களின் விநோத ஆசைகளுக்கு அளவே இல்லையா? அந்தரத்தில் தொங்கும் திகிலூட்டும் நீச்சல் குளம்

இங்கிலாந்தில் “உலகின் முதல் ட்ரான்ஸ்பரண்ட் நீச்சல் குளம்” என்று கண்ணாடியால் செய்யப்பட்ட நீச்சல் குளத்தை இரண்டு கட்டிடங்களுக்கு நடுவே கட்டி பார்ப்பவர்களுக்கு நெஞ்சுவலி வர வைத்திருக்கிறார்கள்

world's first transparent sky pool

world’s first transparent sky pool : மக்கள் மட்டும் தான் விநோத ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி அழகு பார்க்கும் விசித்திர பிறவிகள். கோபப்படாதீங்க… உண்மைய சொல்றோம்… உங்களுக்கு குளிக்கனும்னு தோணுச்சுனா “பாத் ரூம்” பயன்படுத்துவீங்க… கொஞ்சம் வசதியானவங்க “டப்”, ”ஷவர்”னு யோசிப்பாங்க… இன்னும் கொஞ்சம் பெரிய கையா இருந்தா வீட்டுலேயே நீச்சல் குளம் கட்டி குடும்பமா குளிப்பாங்க…

மேலும் படிக்க : நிறம் மாறும் பனிப்பூனைகள்; யூராசியன் லின்க்ஸின் வைரல் வீடியோ

சில ஹோட்டல்களில், அடிக்குமாடிகளில் ஆங்காங்கே பார்ட்டிக்காக நீச்சல் குளங்கள் கட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கே பாருங்கள். இங்கிலாந்தில் “உலகின் முதல் ட்ரான்ஸ்பரண்ட் நீச்சல் குளம்” என்று கண்ணாடியால் செய்யப்பட்ட நீச்சல் குளத்தை இரண்டு கட்டிடங்களுக்கு நடுவே கட்டி பார்ப்பவர்களுக்கு நெஞ்சுவலி வர வைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க : உலகிலேயே விலை உயர்ந்த மீன் இது தான்… ரூ. 72 லட்சத்திற்கு ஏலம் போன க்ரோக்கர்

25 மீட்டர் நீளம் கொண்டுள்ள இந்த நீச்சல் குளத்தை வாடகைக்கு விடும் திட்டமும் இருக்கிறதாம். மாதத்திற்கு 1800 யூரோக்கள் முதல் 6500 யூரோக்கள் வரை வாடகை வசூலிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. ட்ரோனில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் மேல் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்ட்து உங்களின் கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of worlds first transparent sky pool in london

Next Story
இந்த தைரியம் இருக்கே! நாய்களை காக்க கரடியுடன் போராடிய 17 வயது இளம் பெண் – வைரல் வீடியோTrending viral video of 17-yr-old girl fights off a bear
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com