Advertisment

”எந்த வேலையா இருந்தாலும் சரி டீ குடிச்சுட்டு தான் ஆரம்பிப்பேன்” - பிடிவாதம் பிடிக்கும் குதிரை

20 வருடங்களுக்கும் மேலாக காவல்துறையில் இயங்கி வரும் ஜேக் அடுத்த ஆண்டோடு ஓய்வு பெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trending Viral Video Police horse having cup of tea

Trending Viral Video Police horse having cup of tea

Trending Viral Video Police horse having cup of tea : லண்டனின் மெர்செய்சைட் காவல்துறையில் ஜேக் என்ற குதிரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த குதிரை மனிதர்களைப் போல் காலையில் எழுந்ததும் டீ குடிக்காமல் ஒரு வேலையும் செய்யதாம். கேட்கவே விசித்திரமாக இருக்கும் இந்த பழக்க வழகத்தை அங்கிருக்கும் காவல்துறையினர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

Advertisment

மனிதர்களைப் போலவே கொஞ்சம் கதகதப்பான கம்பளி ஒன்றை போர்த்திக் கொண்டு சோம்பேறியாக இருக்கும் அந்த குதிரைக்கு முதலில் ஒரு கப் டீ தரப்படுகிறது. அதனை குடித்து முடித்ததும் உடனே ஜாலியாக தன்னுடைய பணிக்கு தயாராகிவிடுகிறது.  மனிதர்களைப் போல டீ குடிக்கும் குதிரையின் வீடியோவை பாருங்கள்.

மேலும் படிக்க : திருடுறதும் ஒரு கலை பாஸ்… ஏ.டி.எம் மெஷினை திருட வந்து வெறுங்கையுடன் திரும்பிய கத்துக்குட்டிகள்!

பாலின் கொழுப்புச் சத்து முற்றிலும் நீக்கப்பட்ட பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் சக்கரை மற்றும் குளிர்ந்த நீரில் போடப்பட்ட டீயைத் தான் இந்த குதிரை குடிக்கும் என்று இந்த குதிரையை பராமரிக்கும் லிண்ட்ஸே அறிவித்தார். டீ குடித்த பிறகு சுறுசுறுப்பாக இயங்கும் இந்த குதிரையின் புகைப்படங்களையும் லண்டன் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.  டீயெல்லாம் குடித்துவிட்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வேலையில் ஈடுபட்டிருக்கும் ஜேக்கின் புகைப்படம்

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக காவல்துறையில் இயங்கி வரும் ஜேக் அடுத்த ஆண்டோடு ஓய்வு பெற இருப்பதாக காவல்துறையினர் மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment