New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/cats-24.jpg)
Twitter Viral Video of a group of people racing buffalo cart
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எருமை மாட்டு வண்டியில் பயணம் செய்த நல் உள்ளங்களை மனதார திட்டி வருகிறார்கள்.
Twitter Viral Video of a group of people racing buffalo cart
Twitter Viral Video of a group of people racing buffalo cart : நாம் செய்கின்ற நன்மைக்கும் தீமைக்குமான பரிசு நம்மை வந்து சேரும் என்பதில் சந்தேகமே இல்லை. கர்மா ஒன்று இருக்கிறது என்பதை வாழ்வில் அனைவரும் உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு எருமை மாட்டு வண்டியில் இத்தனை பேர் சென்றால் அந்த மாடு எப்படி தான் தாங்கும். வாயில்லா ஜீவனை வதைப்பது கொடுமை என்பதை எப்போது தான் இந்த மக்கள் உணரப் போகின்றார்கள்.
மேலும் படிக்க : கருநாகத்தை வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் – கேரளாவில் அதிர்ச்சி
The buffalo took a perfect revenge, such people shouldn’t be called human. pic.twitter.com/6o1n3LQdQ7
— Singh Varun (@singhvarun) May 23, 2020
ட்விட்டர் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் 5 பேர் பயணம் செய்கிறார்கள். அந்த மாட்டு வண்டிக்கு பின்னால் நான்கைந்து இரு சக்கர வாகனங்கள் வருகின்றன. அனைத்தும் ஹாரன் அடித்து ஹாரன் அடித்து அந்த மாட்டினை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கின்றனர். பார்ப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை போன்று இருக்கும் அந்த சாலையில் அவ்வளவு வேகமாக செல்கிறது அந்த எருமை மாடு.
ஓரளவுக்கு பொறுத்து பொறுத்து பார்த்த எருமை நேராக சென்று, வண்டியை டிவைடரில் தட்டி இடிக்க வைத்து கீழே சாய்த்துவிட்டு, எந்த விதமான அடியும் படாமல் அப்படியே சென்றுவிட்டது. வருண் சிங் என்ற நபர் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எருமை மாட்டு வண்டியில் பயணம் செய்த நல் உள்ளங்களை மனதார திட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.