scorecardresearch

2 நாள் போராட்டம்… களத்தில் 30 பேர்… வாட்டர் கேனில் தலை சிக்கி தவித்த சிறுத்தை மீட்பு

சிறுத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் பார்த்துக்கொள்வதே பெரிய சவாலாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

2 நாள் போராட்டம்… களத்தில் 30 பேர்… வாட்டர் கேனில் தலை சிக்கி தவித்த சிறுத்தை மீட்பு

உங்கள் தலை ஒருவேளை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சிக்கிக்கொண்டால், உங்களால் சாப்பிட முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது. ஏன் மூச்சுக்கூட ஒழுங்காக விட முடியாது. இதனை கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாத நிலையில், மகாராஷ்டிராவில் 2 நாள் சிறுத்தை இந்த வலியை அனுபவித்துள்ளது.

தானே மாவட்டத்தில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தையை விலங்குகள் நலக் குழுக்கள், வன அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகம், கிராம மக்கள் என 30க்கும் மேற்பட்டோர் கைகோர்த்து சுமார் 48 மணி நேரமாக போராடி சிறுத்தையை மீட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில், சிறுத்தை முதலில் காணப்பட்ட பத்லாபூர் கிராமத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி பிடித்து பத்திரமாக மீட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுத்தை குறைந்தது இரண்டு நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காட்டுக்குள் விடப்படுவதற்கு முன், சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா (SGNP) மீட்பு மையத்திற்கு மேல் பராமரிப்புக்காக மாற்றப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, பத்லாபூர் அருகே, அவ்வழியாக சென்றவர்கள் பிளாஸ்டிக் கண்டெய்னரில் சிக்கிய சிறுத்தையை பார்த்துள்ளனர். வீடியோவில், சிறுத்தை கண்டெய்னரிலிருந்து வெளியே வர முயற்சிப்பதை காண முடிகிறது. தகவலறிந்து மீட்பு படையினர் அப்பகுதிக்கு செல்வதற்குள், சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

இதையடுத்து, வனத் துறை அதிகாரிகளும், வனவிலங்கு நலனுக்கான SGNP மற்றும் NGO ரெஸ்கிங்க் அசோசியேஷன் (RAWW)உள்பட பல குழுக்களின் பிரதிநிதிகளும் மீட்புப் பணியில் களமிறங்கினர்.

கிராமமக்கள் சிறுத்தையை பார்த்தால் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டது. சிறுத்தையை பயமுறுத்தவோ, நீங்களே விடுவிக்கவோ முயற்சி செய்யாதீர்கள் என அறிவுறுத்தியிருந்தனர்.

RAWW இன் நிறுவனர் பவன் ஷர்மா கூறியதாவது, இது கல்யான், பத்லாபூர் மற்றும் முர்பாத் நகரங்களை இணைக்கும் மிகப்பெரிய பகுதி.இதில், விலங்கை கண்டறியும் இடத்தை பூஜ்ஜியமாக்கும் பணி கடினமாக இருந்தது. சிறுத்தை அடுத்த 24 முதல் 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்படும் என்றார்.

சிறுத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் பார்த்துக்கொள்வதே பெரிய சவாலாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

பத்லாபூரில் கண்டெடுக்கப்பட்ட சிறுத்தை தண்ணீர் குடிப்பதற்காக பிளாஸ்டிக் கேனுக்குள் தலையை வைத்து மாட்டிக் கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

PAWS-ஐ சேர்ந்த நிலேஷ் பாங்கே கூறுகையில், “மீட்பு குழு, கிராம மக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக விலங்கைக் கண்டுபிடிக்க இரவும் பகலும் ரோந்து சென்றனர். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. தண்ணீர் இல்லாததால், விலங்கு கடுமையாக நீரிழப்புடன் இருந்தது என்றார்.

இதையும் படிங்க: “அய்யோ பாம்பு”… அச்சத்தில் உறைந்த ஏர்ஏசியா விமான பயணிகள் – வைரல் வீடியோ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Two days 30 people get this leopard head out of plastic water can