New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Snake-on-plane.jpg)
Video of snake being spotted inside AirAsia flight : கோலாலம்பூரில் இருந்து தவாவ் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம், ஏ320-200-ல் பாம்பு ஒன்று புகுந்து விமானத்தில் பயணித்த அனைவரையும் அச்சத்துக்குள் தள்ளியது.
Video of snake being spotted inside AirAsia flight : கோலாலம்பூரில் இருந்து தவாவ் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம், ஏ320-200-ல் பாம்பு ஒன்று புகுந்து விமானத்தில் பயணித்த அனைவரையும் அச்சத்துக்குள் தள்ளியது.
ஏதாவது ஒரு பயணியின் செல்லப்பிராணியாக இந்த பாம்பு இருந்திருக்கலாம் என்றும் லக்கேஜ் பகுதியில் இருந்து வெளியேறி இப்படி வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டு பாம்பு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பாம்பு, பயணிகளின் இருக்கைக்கு மேலே இருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் உள்ள பகுதியில் இருந்தது என்றும் எந்த விதமான தொந்தரவையும் அளிக்கவில்லை என்றும் விமானி ஹானா மோஹ்ஷின் கான் தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Yikes!
— Hana Mohsin Khan | هناء (@girlpilot_) February 12, 2022
Snake on a plane!
Either an escaped pet from passenger carry on/luggage or possibly climbed its way into the aircraft from the ground.
Air Asia Airbus A320-200,Kuala Lumpur to Tawau.
This dude happily stayed inside the illuminated area till plane was diverted😂 pic.twitter.com/jqopi3Ofvp
காலம் கடந்தும் காதல் வாழும்; 73 வயதில் தன் துணையை கண்டறிந்த இளம் காதல் பறவை
I would freak out!!
— Sadho (@sadhosays) February 12, 2022
— nirupama kotru🍁🌈🇮🇳 (@nirupamakotru) February 12, 2022
இந்த ட்வீட்டை பார்த்த பலருக்கும் ஸ்னேக்ஸ் ஆன் தி பிளேட் படம் ஞாபகம் வர அதனையும் கமெண்ட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்து என்ன என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.