அல்ட்ரா மார்டன் “தமிழச்சிகள்” இப்படித்தான் இருப்பார்கள் – வைரலாகும் டூடுல்கள்

மெட்டி, சிலம்பு, கொலுசு, மாட்டல், வங்கி, நெத்திச்சூடி, பிறை, புல்லாக்கு, நெளி மோதிரம் போன்ற பாரம்பரிய தமிழ் அணிகலன்கள் அணிந்த தமிழ் பெண்ணின் ஓவியம் இவை அனைத்திற்கும் ஹைலைட்டாக இருக்கிறது.

ultra modern tamil ponnu doodles with traditional touch check the works of artist priya

நாம் அன்றாடம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றோம். சில நேரங்களில் கருத்து சொல்ல, பலநேரங்களில் பொழுது போக்க என்று தான் சமூக வலைதள பயன்பாடுகள் உள்ளன. ஆனால் ஒரு சிலை புகைப்படக் கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், டிஜிட்டல் ஓவியர்கள் தங்களின் திறனை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, நம்முடைய சிந்தனையையும், அழகுசார் உணர்வுகளுக்கு வழமான தீணியையும் அளிக்கிறார்கள்.

அந்த வகையில் பண்பியல் வடிவமைப்பாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் டிஜிட்டல் வடிவமைப்பாளர், கலைஞர் ப்ரியாவின் இன்ஸ்ட்ரகிராம் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை நாம் தற்போது பார்வையிடலாம். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள, படைப்புகள் அனைத்தும் அல்ட்ரா மார்டன் தமிழ் பெண்கள் தான். ஆனாலும் அந்த படைப்புகளில் இருக்கும் “பாரம்பரிய டச்” அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சில நேரங்களில் குறிப்பிட்ட இன மக்களின் ஆடைகள், ஆபரணங்களோடு வடிவமைக்கப்படும் படைப்புகளும் மனதில் நிற்கின்றன. அந்த வகையில் அவருடைய குறத்தி படைப்பும், தொதவர் இன பெண்ணின் வடிவமைப்பும் நம்மை அடடா சொல்ல வைக்கிறது.

சங்க இலக்கியங்களில் இருந்தும், கோவில் சிலைகளில் இருந்தும் பார்த்து “இன்ஸ்பையர்” ஆகி அவர் தமிழ் ஆபரணங்கள் பற்றி அதிகம் அறிந்து அதனை தன்னுடைய ஓவியங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க : இந்த செல்லப்பிராணி போல் யாராலும் நிச்சயமாக யோகா செய்ய முடியாது – வைரல் வீடியோ

மெட்டி, சிலம்பு, கொலுசு, மாட்டல், வங்கி, நெத்திச்சூடி, பிறை, புல்லாக்கு, நெளி மோதிரம் போன்ற பாரம்பரிய தமிழ் அணிகலன்கள் அணிந்த தமிழ் பெண்ணின் ஓவியம் இவை அனைத்திற்கும் ஹைலைட்டாக இருக்கிறது. இவரின் படைப்பில் நீங்கள் மிகவும் அதிகம் விரும்பும் படைப்பாக எது உள்ளது என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ultra modern tamil ponnu doodles with traditional touch check the works of artist priya

Next Story
இந்த செல்லப்பிராணி போல் யாராலும் நிச்சயமாக யோகா செய்ய முடியாது – வைரல் வீடியோTrending viral video of dog perfectly mimicking owner during yoga session
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com