நண்பேண்டா! காவலுக்கு வந்த நாயுடன் செல்லமாக பழகும் குட்டி ஒட்டகச்சிவிங்கி!

இந்த இரண்டு நண்பர்களும் செய்யும் செல்ல சேட்டைகளை அனைவரும் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

By: Updated: December 5, 2019, 08:06:04 PM

Dog befriends orphan baby giraffe in South Africa : மனிதர்களை விட விலங்குகள் நல்ல நண்பர்களாக இருக்கின்றன. யானைகள், நாய்கள், பூனைகள், ஆடுகள் என அனைத்தும் மற்ற விலங்கினங்களிடம் மிகவும் அன்பாகவும், இணக்கத்துடன் இருப்பது நம் அனைவரையும் மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்யும் என்பது தான் உண்மை.

Dog befriends orphan baby giraffe in South Africa

ரினோ ஆர்ஃபனேஜ் என்ற விலங்குகள் காப்பகத்தில் தற்போது ஒரு ஒட்டகச்சிவங்கி குட்டி தத்தெடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் நாய் ஒன்றையும் நண்பனாக இணைத்துள்ளனர். இந்த குட்டி ஒட்டகச்சிவங்கிக்கு ஜாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னப்பரிக்காவில் பிறந்த இந்த குட்டி 2 நாட்களில் தனித்து விடப்பட்டது. பின்பு அந்த ஒட்டகச்சிவங்கியை மோரோங்வ்வானே கேம் ஹெரிட்டேஜ்ஜின் உரிமையாளர் மிகவும் பலவீனமான நிலையில் கண்டறிந்தார். உதவி மையத்துக்கு கால் செய்யவும் அவர்கள் வந்து ஒட்டகச்சிவங்கியை காப்பாற்றினர்.

மேலும் படிக்க : வைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்! இது வேற லெவல்!

அங்கிருந்து மீட்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கிக்கு பாதுகாப்பு அளிக்க ஹண்டர் நாயை நியமனம் செய்தனர் காப்பகத்தினர். இதனைத் தொடர்ந்து இவ்விரண்டு ஜீவராசிகளும் நன்றாக பழகி, நட்பு பாராட்டி வருகின்றார்கள். இந்த இரண்டு நண்பர்களும் செய்யும் செல்ல சேட்டைகளை அனைவரும் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Viral news dog befriends orphan baby giraffe in south africa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X