இந்த குழந்தை மிகவும் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். இவளுடைய அம்மாவும் மிகவும் நல்லவர். ஆனால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அர்த்தம் தெரியாத அனைத்தையும் மனதில் எடுத்துக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று அந்த இன்ஸ்டகிராமின் கேப்சனில் போடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் இருக்கும் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவரிடம் ஹேர் ட்ரெஸ் செய்து கொள்ள சென்றிருந்த குட்டிப்பாப்பா அரியோன்னா வெகுநேரம் தன்னுடைய பிம்பத்தையே கண்ணாடியில் பார்த்து ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்தார். சிறிது நேரம் கழித்து “நான் அசிங்கமாக இருக்கின்றேன். நான் அசிங்கமாக இருக்கின்றேன்” என்று கூற ஆரம்பித்தாள்.
View this post on InstagramA post shared by We All Value Equality ???????????????? (@lilwavedaddy) on
இதனை கேட்டுக் கொண்டிருந்த ஹேர்ஸ்டைலிஸ்ட் “நீ இப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நீ அப்படியெல்லாம் இல்லை. நீ மிகவும் அழகானவள். அழகாக இருக்கின்றாய். உன் கன்னக்குழி எவ்வளவு அழகாக இருக்கிறது ” என்று ஆறுதல் கூற ஆரம்பித்தார். சோகமான இருந்த குழந்தை தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தது. அக்குழந்தைக்கு ஆறுதல் கூறும் அந்த ஸ்டைலிஸ்ட் அக்குழந்தையை கட்டிக் கொண்டு ஆறுதல் வழங்கினார். இது பார்க்கும் அனைவர் மனதையும் நெகிழ்த்தும் விதமாக இருந்தது. பின்னர் தினமும் நான் கறுப்பு. நான் அழகு என்ற வார்த்தைகளை மந்திரமாக சொல்ல வைத்து அந்த குழந்தைக்கு தைரியம் கொடுத்துள்ளார் அந்த ஹேர்ட்ரெஸ்ஸர்.
ஒல்லியாக இருந்தால், குண்டாக இருந்தால், கருப்பாக இருந்தால், மாநிறமாக இருந்தால், சோர்வாக இருந்தால், விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால், விளையாட்டு மற்றும் படிப்புகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தால், முடி நேராக இருந்தால், சுருட்டை முடியாக இருந்தால், உடற்குறைபாடுகளுடன் இருந்தால் - அனைத்து வகை குழந்தைகளும் அழகான குழந்தைகள் தான். திறமை மிக்கவர்கள் தான். அழகு என்பதற்கான அர்த்தத்தை மாற்றினால் தான் குழந்தைகள் உலகத்தை பார்க்கும் விதமும், உலகம் குழந்தைகளை பார்க்கும் விதமும் மாறும்.
மேலும் படிக்க : அது என்ன கட்சி தலைவரா? ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல் வீடியோ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.