கொலம்பிய நாட்டில் அமைந்திருக்கிறது பாரன்குய்லா என்ற பகுதி. அங்கு உள்ள எஸ்டாடியோ மெட்ரோபோலிட்டானோ ரொபெர்ட்டோ மெலெண்டெஸ் என்ற மைதானத்தில் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. அந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் அனைவரும் போட்டியில் மூழ்கியிருந்தனர். அங்கு தன்னுடைய பார்வையற்ற மகனை அழைத்துவந்த தந்தையோ கால்பந்து போட்டி குறித்து தன்னுடைய மகனுக்கு கூறிக் கொண்டிருந்தார்.
இருவரும் ஜூனியர் எஃப்.சி. ஜெர்ஸியை அணிந்து கொண்டு வந்து இந்த போட்டியை கண்டுகளித்தனர். தன்னுடைய மகனுக்கு போட்டி குறித்து தந்தை விளக்கிக் கொண்டிருக்கும் வீடியோவை “Junior Es Mi Pasion” என்ற ஃபேன் பேஜ் வெளியிட சமூக வலைதளங்களின் வைரல் ஹிட் அடித்திருக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவை ஷேர் செய்த போது, அதன் மேலே “செபஸ்டியன் அழகான குழந்தை. அவனுக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் அவனுடைய விளையாட்டு ஆர்வத்தை குறைத்துவிடாது. ஒவ்வொரு முறையும் அவனுடைய தந்தை அவனுக்கு இந்த விளையாட்டு குறித்து விளக்கிக் கொண்டிருப்பார்” என்றும் குறிப்பிட்டிருந்தது.
மேலும் படிக்க : எத்தனையோ யானை வீடியோ பாத்துருக்கோம், ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கே!
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்துகளை இணையத்தில் பதிவு செய்து வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அப்பாவையும் அந்த குழந்தையையும் அனைவரும் மனமார்ந்து வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அந்த அப்பாவின் அன்பு உள்ளத்தையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Viral trending video father describing football match to his visual impaired kid