சாப்பாட்டிற்கு வைத்திருந்த பணத்தில் பூனைக்கு பால் வாங்கித் தந்த சிறுவன் (வீடியோ)

உனக்கு பசிக்கிறதா என்று கேட்கவும் அந்த குழந்தையின் முகம் சோகமடைந்துவிட்டது.

உனக்கு பசிக்கிறதா என்று கேட்கவும் அந்த குழந்தையின் முகம் சோகமடைந்துவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral trending video of hungered kid buys milk and biscuit for a cat

viral trending video of hungered kid buys milk and biscuit for a cat

viral trending video of hungered kid buys milk and biscuit for a cat : ஒருவருக்கு உதவ மனம் இருந்தால் போதும். பணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைவரும் மனம் உவந்து இல்லாதவர்களுக்கு உதவுவதில்லை. ஆனால் இங்கே ஒரு குட்டிப் பையனை பாருங்கள். தன் கையில் இருக்கும் காசை வைத்து பூனைக்கு பாலும் பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு வெறும் வயிறுடன் காய்ந்து கொண்டிருக்கின்றான்.

Advertisment

மேலும் படிக்க : பசியால் வாடிய நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள்!

Advertisment
Advertisements

அந்த சிறுவனிடம் ஒருவர் கேட்கிறார் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.? இந்த பூனைக்கு எங்கே இருந்து பால் வாங்கி வந்தாய் என்று?

அந்த சிறுவனோ, அங்கே என்று கையை நீட்ட, இதற்கு எவ்வளவு ஆனது? என்று கேட்கிறார்.

ரூ. 20 என்கிறான் அந்த குட்டிச் சிறுவன்.

அவர் “நீ சாப்பிட்டு விட்டாயா?” என்கிறார்.

மௌனமாய் தலையை ஆட்டி, ஆமாம் என்கிறான்.

எப்போது? என்கிறார்.

காலையில் தான் என்கிறான் சிறுவன்.

உடனே என்ன சாப்பிட்டாய்? மதிய உணவு சாப்பிட்டாயா என்கிறார்.

இல்லை என்கிறான் சிறுவன்

உன் கையில் இருந்த காசிற்கு பூனைக்கு பால் வாங்கி கொடுத்துவிட்டாய், இப்போது நீ என்ன செய்யப் போகிறாய் என்று அவர் கேட்கிறார்.

பதில் பேசாமல் மௌனமாய் நிற்கிறான் அந்த சிறுவன்.

உனக்கு பசிக்கிறதா என்று கேட்கவும் அந்த குழந்தையின் முகம் சோகமடைந்துவிட்டது.

தனக்கு இல்லையென்றாலும் பிறருக்கு உதவும் மனமிருக்கே அது தான் சார் கடவுள். இந்த குழந்தையின் மனமும் அதற்கு நிகரானது தான். தன் மதிய உணவுக்கான பணத்தில் பூனைக்கு பால் வாங்கிக் கொடுத்து மகிழும் இந்த உள்ளம் இன்றைய ட்ரெண்டிங் வைரல் ஹீரோ.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: