viral trending video of iron pressing newspaper amid corona outbreak : இந்தியாவில் கொரொனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அம்மாநிலம் தொடர்ந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நோயினை கட்டுக்குள் வைக்க போதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆரோக்கியமான உணவு முதல் அரசுக்கு பொறுப்புடன் ஒத்துழைப்பு தரும் குடிமக்கள் வரை அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வருகிறது கேரளா. இருப்பினும், தொடர்ந்து மக்கள் விடாமுயற்சியுடன் போராடி வருகின்றனர்.
மேலும் படிக்க : “அவித்த முட்டை, மீன் வறுவல்” – கொரோனா நோயாளிகளுக்கு கேரள அரசு வழங்கும் உணவுகள் என்ன?
பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பதை தொடர்ந்து இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் நமக்கு உறுதி செய்கிறது. கடந்த வாரம், ஆட்டோ ட்ரைவர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவில் ஏறும் பயணிக்கு தேவையான சோப்பு மற்றும் தண்ணீரை வழங்கி கைகளை கழுவதற்கான செட்-அப் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததை பார்த்தோம். தற்போது அதே பாணியில் செய்தித் தாள்களை அவர்கள் எப்படி படிக்கின்றார்கள் என்பதையும் பார்ப்போம்.
மேலும் படிக்க : கேரளாவில் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம்!
செய்தித்தாள்களில் எவ்வளவு நேரம் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க இருக்கும் வழி எதுவோ அதை பின்பற்றுவதில் தவறு ஏதும் இல்லையே. இந்த வீடியோவில் பெண்மணி ஒருவர் செய்தித்தாள்களை எடுக்கும் விதமும், அதனை வீட்டுக்குள் எடுத்துச் சென்று ஐயன் பாக்ஸினை வைத்து இருபுறமும் நன்றாக தேய்த்துவிட்டு பின்பு படிக்க எடுத்துச் செல்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil