Advertisment

"கொரோனா கொரோனா என்னை கொன்னுடுவ வீணா” - இது ஒரு புதுவகை விழிப்புணர்வு ஃப்ரெண்ட்ஸ்

மிகவும் சிரீயஸாக சொன்னால் தான் என்ன? இல்லை விளையாட்டாக சொன்னால் என்ன? கொரோனா குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சரியாக சென்று சேர்ந்தால் சரி தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral trending video of Smule singers spreading awareness of Coronavirus

Viral trending video of Smule singers spreading awareness of Coronavirus

Trending Viral Video of Smule Singers Spreading awareness of Coronavirus : ரொம்ப அவசரமா போய்ட்டு இருக்கிற உலகத்துல இசை தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. அதனால் தான் வேலைப்பளுவின் போதும் ஒரு இசை நம்மை மகிழ்ச்சி அடைய வைத்துவிடுகிறது. அப்படித்தான் இந்த வீடியோவும். கொஞ்சம் யோசிச்சு பாத்தா, ஊரே ரணகளமா இருக்குது, எப்படி இந்த சூழலிலும் இப்படியெல்லாம் டிக்டாக், ஸ்ம்யூல் பண்றாங்கன்னு யோசிக்க தோணுது. மற்றொரு பக்கம், அய்யோ இவங்களும் இல்லாம போய்ட்டா “ஓ.சி.டி”, மனஉளைச்சலும் கொரானாவுக்கு முன்னாள் நம்மை தாக்கிவிடும் என்று தான் யோசிக்க தோன்றுகிறது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா பரிதாபங்கள் : முதல்ல உங்ககிட்ட இருந்து தான் ”கொரானாவை” காப்பாத்தனும்!

நேற்று கும்பகோணம் கோவில் திருவிழாவில் கொரோனா கொரோனா என்று சத்தமிட்ட பக்தர்களின் வீடியோவை நாம் கொரோனா பரிதாபம் பக்கத்தில் பார்த்தோம். இன்று, நடிகர் ரஜினிகாந்த், நடிகை மீனா ஆகியோரின் நடிப்பில் வெளியான முத்து படத்தில் இடம் பெற்ற ”தில்லான்னா, தில்லான்னா நான் தித்திக்கின்ற தேனா” பாடலுக்கு கொரோனாவால் ஏற்பட்ட பரிதாபத்தை பார்ப்போம்.

அட காய்ச்சல் தந்ததும் நீதானா, மாஸ் கேதரிங் வேணாமுன்னு நியூசில் சொன்னானா.... கொரோனா கொரோனா ...

என்ன கொன்னுடுவ வீணா...

நெஞ்சுக்குள்ள நீயும் வரவேணாம்...

கூட்டத்துல போனா

நீ தொத்திக்குவ Soon-ah

வீட்டுள்ள Safe இருப்பேன்னா...

என்று இருவரும் பாட்டுப்பாடியுள்ளனர். இவர்கள் சொல்ல வந்த கருத்தும் சொல்லிச் சென்ற விசயமும் சரி தான்... மிகவும் சிரீயஸாக சொன்னால் தான் என்ன? இல்லை விளையாட்டாக சொன்னால் என்ன? கொரோனா குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சரியாக சென்று சேர்ந்தால் சரி தான். ஹைலைட்டான விசயம் என்னென்னா அந்த பாட்டுக்கு ஏற்ப அவர்களின் மெல்லிய துள்ளாட்டம் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment