New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/cats-9.jpg)
Viral Video of 8 Dogs Come Together To Set A World Record For Conga
இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே 1.4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Viral Video of 8 Dogs Come Together To Set A World Record For Conga
Viral Video of 8 Dogs Come Together To Set A World Record For Conga : உலகில் பல்வேறு சிறப்பான நிகழ்வுகளை நடத்தி காட்டும் மனிதர்களின் திறன்களை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். சமீபத்தில் கின்னஸ் வேல்ர்ட் ரெக்கார்ட்-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸா என்ற 12 வயது சிறுமியின் 8 நாய்குட்டிகளை ஒரே வரிசையில் நிற்க வைத்து 5 மீட்டர் தூரம் வரை நடக்க வைத்துள்ளார். கோங்கா (Conga Line) வரிசை எனப்படும் இந்த வரிசையில் நாய்கள் தங்களின் முன்னங்கால்களை முன்னே இருக்கும் நாய்களின் முதுகில் வைத்த படி நடந்து வந்தன.
கேட்டி, எம்மா, மாயா, சாலி, ஜெனிஃபர், சபரீனா, ஸ்பெக்கி, நாலா என்ற இந்த 8 நாய்களும் நிகழ்த்திய இந்த சாகச நிகழ்வு அலெக்ஸாவிற்கு கின்னஸ் விருதினை வாங்கிக் கொடுத்துள்ளது. இத்தகையை விருதினை பெற்ற முதல் ஆளும் அலெக்ஸா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே 1.4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோங்கா என்பது லத்தீன் அமெரிக்கர்களின் நடனமாகும். ஒருவர் பின் ஒருவர் ஒரு சங்கிலி போல தொடர்ச்சியாக நின்று ஆடும் நடனமாகும். இப்படி ஒரு சங்கிலி தொடர் போல் தன்னுடைய 8 நாய்களையும் நடக்க வைக்க அலெக்ஸா வெகுகாலம் அந்த நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : யார் தமிழன்? கமல்ஹாசன்- ஏ.ஆர்.ரகுமான் சுவாரசிய உரையாடல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.