Viral video of a driver chasing wild elephant in midnight : டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே யானைகள் இந்த உலகில் இருந்து வருகின்றன. இன்று உலக அளவில் நகரமயமாக்கல் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் விலங்குகளில் ஒன்றாக யானைகள் மாறிவிட்டன. கண்முன்னே பல்வேறு இன்னல்களை யானைகள் அனுபவித்து வருகின்றன.
Advertisment
யானைகளை காப்பாற்ற உலக அளவில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில நபர்கள் இது குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இருப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது.
சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நள்ளிரவில் கார் ஓட்டி வரும் நபர் ஒருவர் சாலையின் ஓராமாக நின்றிருக்கும் யானை ஒன்றை பார்த்துவிட்டார். சாலையில் இருந்து அது நின்றிருக்கும் பக்கமாக காரை இயக்கி அந்த யானை அச்சுறுத்தியது மட்டுமின்றி அதனை தொடர்ந்து கார் ஓட்டி மிரட்டும் காட்சிகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த யானையின் சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் வரை சென்று அந்த யானை பிறகு காட்டில் இருக்கும் மரத்தின் பின்னால் அச்சத்துடன் நிற்கிறது. இந்த வீடியோவை எடுத்த நபர் அதனை டிக்டாக்கில் பதிவிட இது பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. பின்னர் அந்நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பலரும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil