Advertisment

புலிய காட்டுல பாத்திருப்போம், கூண்டுல பாத்திருப்போம்! ஆனா வீட்டுல?

ஒரு வீட்டில் இருந்து தப்பித்து மற்றொரு வீட்டிற்கு செல்லும் காட்சி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.

author-image
WebDesk
Jun 23, 2020 10:19 IST
Viral video of a tiger running away from humans

Viral video of a tiger running away from humans

Viral video of a tiger running away from humans : வன விலங்குகளின் சுட்டித்தனமும், அறிவுக்கூர்மையும் நம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் மிகவும் முக்கியமான அம்சமாக இன்றும் இருக்கிறது. அந்த உணர்வுகள் வெளிப்படும் தருணத்தை நாம் காட்சிப்படுத்தும் போது அது வைரலாவதில் வியப்பேதும் இல்லை தான். மக்கள் வாழும் அதே பகுதியில் மக்களோடு மக்களாக சேர்ந்து வாழும் வனவிலங்குகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம். உதாரணம் யானைகள். குஜராத் பகுதியில் சிங்கங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு மிகவும் நெருக்கமாக வாழ்கின்றன.

Advertisment

மேலும் படிக்க : தேன் ஷாம்பு, வெள்ளரி பேஸ்ட்… தலைமுடிக்கு இவை ஏன் தேவை தெரியுமா?

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் புலி ஒன்று ஒரு வீட்டில் இருந்து தப்பித்து மற்றொரு வீட்டிற்கு செல்லும் காட்சி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது. அந்த புலியின் அட்டகாசத்தை பார்த்து பயந்திருக்கும் மக்கள் இங்கும் அங்கும் ஓடும் காட்சி மேலும் பீதியை கிளப்புகிறது. புலியை காட்டுல பாத்திருப்போம். கூண்டுல பாத்திருப்போம். ஏன் ஜூவ்ல கூட பாத்திருப்போம். ஆனா வீட்டுக்குள்ள பாத்தா எப்படி இருக்கும் என்பது தான் இந்த வீடியோ. இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே எக்கச்சக்க லைக்குகளையும், ஷேர்களையும் அள்ளிக் குவித்தது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

#Social Media Viral #Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment