கனடாவில் வரலாறு காணாத அளவில் கடுமையான குளிர் காலம் நிலவி வருகிறது. ஸ்குவாமிஷ் மற்றும் வான்கோவர் ஆகிய பகுதிகளில் இயல்பு நிலைக்கும் குறைவாக குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இது போன்ற சீதோசண நிலையின் போது சில அரிய நிகழ்வுகள் எப்போதாவது அரங்கேறும். ஸ்குவாமிஷ் பகுதியில் ஓடையாக ஓடி அருவியாக மாறும் ஷானோன் (Shannon) அருவியின் நீரானது கண் முன் ஓடிக் கொண்டிருக்கும் போதே உறைந்து மாயமாக மறைந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை ஒரு லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலைவனத்தில் பனிமழை; ஆச்சரியத்தில் ஆழ்ந்த சவுதி மக்கள்
காட்டுக்கு வேணும்னா ராஜாவா இரு…ஆனா இங்க! சிங்கத்தை குழந்தையைப் போல் தூக்கிச் செல்லும் பெண்
இந்த வீடியோவை பார்த்து ஒரு சிலர் இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மிகவும் தளர்வான பனித்துகள்கள், கட்டிகள் மற்றும் பாறைகள் நெகிழ்ந்து மீண்டும் பனி மேற்பரப்பாக மாறும் இயற்கை நிகழ்வை ஃப்ராஸில் ஐஸ் (Frazil Ice) என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர் என்று இந்த வீடியோவிற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil