New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/cats-11.jpg)
காடுகளின் அனைத்து பரப்புகளிலும் சாலைகளும் போக்குவரத்தும் அதிகரித்த போது புலிகளை பார்ப்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
viral video of men scared tigers away on roads : மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை புலிகள். காடுகளிலும் அவ்வளவு எளிதாக புலிகளை கண்டு விட இயலாது. மிகவும் அரிதான காலங்களில் மட்டுமே பார்க்க முடியும். காடுகளின் அனைத்து பரப்புகளிலும் சாலைகளும் போக்குவரத்தும் அதிகரித்த போது புலிகளை பார்ப்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
உங்களால் இது என்ன என்று கண்டுபிடிக்க முடிகிறதா? வைரலாகும் மிமி பூப்பா புகைப்படம்
மனிதர்கள் இப்போதெல்லாம் புலிகளை கண்டால் மிரள்வதே இல்லை. புலிகள் தான் மனிதர்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் இரண்டு புலிகள் சாலைகளை கடக்க முயற்சி மேற்கொள்கிறது. ஆனால் அங்கே வாகனங்களில் வந்த நபர்கள் தொடர்ந்து டார்ச் லைட் அடிப்பதும், அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதும், புலிகளுக்கு வழிவிடாமல் படம் எடுத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அது மற்ற அனைவரையும் அச்சத்திற்கு ஆளாக்குகிறது என்று அவர் அந்த ட்விட்டரில் கூறியிருந்தார்.
Roads are like deep wound to a forest ecosystem...
— Susanta Nanda (@susantananda3) August 22, 2021
One can have all mitigation in place, but the scar remains. pic.twitter.com/g285CCvQWK
இந்த வீடியோவை கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 1,534 பேர் லைக் செய்துள்ளனர். இது தொடர்பான உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.