Advertisment

60 நொடிகளில் 196 கணக்குகளை ”சால்வ்” செய்த கில்லாடி சிறுவன்! கணித புலியின் வைரல் வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பார்வையிட்டுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
60 நொடிகளில் 196 கணக்குகளை ”சால்வ்” செய்த கில்லாடி சிறுவன்! கணித புலியின் வைரல் வீடியோ

watch viral trending video of 10 year-old solves 196 problems in 1 minute :  நாதுப் கில் என்ற 10 வயது மாணவனின் அசத்தல் சாதனைகளை கேட்டால் நமக்கும் கூட கணக்கு பிடித்துவிடும் போல இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த இந்த மாணவன் 1 நிமிடத்தில் 196 கணக்குகளை செய்து கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

Advertisment

கணித வாய்ப்பாடுகளை எளிமையாக கற்றுக் கொள்ள உதவும் வகையில் கின்னஸ் ரெக்கார்டுடன் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் Times Tables Rock Stars என்ற செயலியில் தான் இந்த அசத்தல் சாதனையை மேற்கொண்டார் நாதுப். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்த சிறுவனின் அசத்தல் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

196 கணக்குகளை 60 நொடிகளில் செய்திருக்கிறார் என்றால் ஒரு நொடிக்கு மூன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை முடித்திருக்கிறார் என்று அர்த்தம். இதனை கேட்டாலே நமக்கு தலை சுற்றுகிறது. ஏன் என்றால் நமக்கெல்லாம் கணக்கு என்றால் பிணக்கு தான். அய்யோ அதுவும் கூட இல்லைங்க வேப்பிலை கணக்கா அத்தனை கசப்பு. ஆனாலும் இந்த சாகச வீடியோவை பாருங்கள். இந்த குட்டிச்சுட்டியின் அறிவை கண்டு வியந்து தான் போவோம்.

இந்த ரெக்கார்ட்டை செய்து முடித்த இவரை அந்த டிடி செயலியே வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த பட்டத்தை பெற்றத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார் நாதுப் கில்.

மேலும் படிக்க : ”ஆட்டு மூளைன்றது இது தாங்க” நாம் தான் ரொம்ப நாள் தப்பாவே புரிஞ்சுக்கிட்டோம்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment