கேரளா வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பை தனது உயிரைப் பற்றி கவலைப்படாது விரட்டும் பெண்ணின் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு:
கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் நேற்று முதல் சீரான நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. மழையின் அளவு குறைந்து, இரண்டு நாட்களாக ஆங்காங்கே வெயில் அடித்து வருகிறது.
அங்கு ஏற்பட்டிருந்த மழையின் தாக்கம் குறைந்ததால், வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் வீடுகள் முழுமையாக மூழ்கியிருந்தது தற்போது பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியிருக்கிறது.
இயல்பு நிலைக்கு திரும்பும் கேரள மாநிலம்: முகாம்களிலிருந்து வீடு திரும்பும் மக்கள்!
இந்நிலையில், மலைகள் மற்றும் காடுப் பகுதிகளில் இருந்து பல பாம்புகள் ஊருக்குள் அடித்து வரப்பட்டது. அதில் ஒரு மலைப்பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்டது. மிகவும் நீளமாக இருக்கும் அந்த பாம்பு ஒரு ஆளையே விழுங்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக உள்ளது.
அந்த பாம்பை, தனது இல்லத்திற்குள் நுழைய விடாமல் தனது உயிரைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் வெரும் மாப் ஸ்டிக்கை வைத்து துரத்துகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.