
ஆதார்- பான் இணைப்பு தொடர்பாக எஸ்.பி.ஐ பெயரில் பண மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகமான பயணிகள் விடுமுறை நாட்களில் பயணம் செய்வதால், திருநெல்வேலியிலிருந்து, தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ரயில் இன்று இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவையில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கெல்லாம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது தொடர்பாக மா.சுப்பிரமணியன் பேசினார்.
ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள்ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் குவிந்து வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் அட்டை பெட்டிகள் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்தது. லாரி ஓட்டுநர் இறங்கிவிட அங்கிருந்த…
இஸ்ரோவின் எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சென்னையில் போலியான ஆவணங்கள் கொடுத்து உருவாக்கப்பட்ட 1500 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றம் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.