
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார்.
மூன்று பேர் எமன் கடவுள் மீது செய்த சத்தியத்தை நிறைவேற்றப் பாடுபடுவதுதான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் கதை.
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம், 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், எந்த ‘கட்’டும் சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸர், நாளை மாலை ரிலீஸாகிறது.