பெரியார் சிலை மீது ஷூ வீச்சு Live Updates
பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். குடி போதையில் சிலையை உடைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இந்தியாவில் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே இடதுசாரி தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல், புதிகோட்டை மாவட்டம் ஆலங்குடியின் விடுதி கிராமத்தில் நேற்றிரவு மர்ம நபர்களால் பெரியார் சிலையில் இருந்து தலை உடைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்குத் தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து...
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்
பெரியார் சிலை அகற்றப்படும் என்று சொன்னதும் அதனை சேதப்படுத்தியதும் காட்டுமிராண்டிதனம். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பேட்டியில் ரஜினி கூறியுள்ளார்.
பெரியார் சிலை சர்ச்சை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க!’ என சவால் விடுத்தார்.
நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது
பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி சென்னையில் போராட்டம் நடந்தது. பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் சிலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.