பெர்சனல் லோன். இன்றைய அவசர உலகில் அனைவரும் வங்கிகளில் தேடி செல்வது இதற்கு தான்.தனிநபர் கடனை அனைத்து இந்திய வங்கிகளும் வழங்குகின்றன பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு வங்கிகள் பெர்சனல் லோனை வழங்குகின்றன.
பெர்சனல் லோனை வாங்குவதற்கு பின்பு ஆயிரம் முறை யோசிக்கும் நீங்கள், வாங்குவதற்கு முன்பு இதைப்பற்றியெல்லாம் கட்டாயம் யோசித்து விடுங்கள். முதலில் பெர்சனல் லோன் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை இவை தான்.
1. அதிக வருமானத்துடன் பெர்சனல் லோனிற்கு விண்ணப்பம் செய்பவரின் கிரிடிட் ஸ்கோரும் பரிசீலிக்கப்படும், ஸ்கோர் மோசமாகவோ / குறைவாகவோ இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
2. அவசரத் தேவையை முன்னிட்டே எல்லோரும் தனிநபர் கடனை வாங்குகின்றனர் என்பதால், கெடு காலத்துக்கு முன்னதாகவே அவர்கள் பெரிய தொகையை திருப்பிச் செலுத்த விரும்பலாம்.
ஆகையால், நீங்கள் பெறவிருக்கும் தனிநபர் கடன் திட்டத்தில் தவணைகளை முன்செலுத்த, அல்லது பகுதி தொகை செலுத்த அல்லது கடன் பளுவைக் குறைக்க பெரிய தொகையை செலுத்த அனுமதி உண்டா? என்பதை அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3. ஒரு சில வங்கிகள், அவர்கள் வட்டி இழப்பை ஈடுகட்டும் நோக்கத்துடன் கூடுதல் கட்டணம் வசூலிப்பர், மற்றும் சில வங்கிகள் இதற்கு கட்டணம் வசூலிக்காவிட்டாலும், வரம்புகளுக்கு உட்பட்டு அனுமதிப்பர்.
படியுங்கள்.. டாப் 3 வங்கிகள் ஏ.டி.எம் சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் கட்டணம்!
4. தனிநபர் கடனுக்கு கியாரண்டி, பிணைய சொத்து எதுவும் தேவையில்லை. சராசரியாக வங்கிகள் 11% முதல் 16% வரை வட்டி வசூலிக்கின்றனர், வங்கி சாரா நிறுவனங்கள் மிக அதிக வட்டி விகிதத்தில் கடனை வசூலிக்கின்றனர்.
5. இஎம்ஐ என்று அழைக்கப்படும் தவணை என்பது நீங்கள் எத்தனை வருடங்களில் கடனை அடைக்க விரும்புகிறீர்கள் என்பதை பொருத்து மாறுபடும்.
அதற்கு ஏற்ப வட்டியும் மாறுபடும். எனவே எத்தனை வருடத்தில் இக்கடனை திருப்பிச் செலுத்த இயலும். அல்லது முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த இயலும் என்பதை பார்த்து கடனை வாங்க வேண்டும்.
6. கடனை முன் செலுத்தும் அல்லது பகுதி தவணை செலுத்தும் வசதிகளுடன், கடன் தொகை முழுவதையும் கெடு தேதிக்கு முன்னதாகச் செலுத்தவும் விதிமுறை ஒன்று பின்பற்றப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலும், வங்கிகள் தாங்கள் இழக்க நேரும் வட்டித் தொகையில் ஒரு பகுதியை கட்டணமாக வசூலிக்க விரும்புவர்.
வங்கிகளிடம் கவனம் தேவை: இதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்!