Bank Tamil News: தற்போதைய ஊரடங்கு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சில வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கடன் அட்டைகள் இந்த மாதம் காலாவதி தேதியை தாண்டியுள்ளது, அதே போல வேறு சில வாடிக்கையளர்களின் டெபிட் மற்றும் கடன் அட்டைகள் அடுத்து சில மாதங்களில் காலாவதியாகப் போகின்றன. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், ஏப்ரல் 20 முதல் இயங்கலாம் என மத்திய அரசு கூறியப் பிறகும், கொரியர் சேவைகள் இயங்க உள்ளூர் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதன் காரணமாக தங்களால் வாடிக்கையாளர்களின் காலாவதியான டெபிட் மற்றும் கடன் அட்டைகளை மாற்றிக் கொடுக்க இயலவில்லை என வங்கிகள் கூறுகின்றன.
சராசரியாக ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் அட்டைகள் புதுப்பித்தலுக்காக வரும். இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் புதுப்பிக்க வந்த அட்டைகளின் எண்ணிக்கை இந்த சராசரியை விட அதிகமாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என, ஒரு முன்னனி payment network கம்பெனியின் மூத்த அதிகாரி கூறுகிறார்.
ஆன்லைனில் தங்க பத்திர திட்டத்துக்கு விண்ணப்பிங்க - அட்டகாச தள்ளுபடி பெறுங்க
ஏப்ரல் 2015 ல், வங்கிகள் 1.13 கோடி டெபிட் அட்டைகள் மற்றும் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் என மொத்தமாக 1.15 கோடி அட்டைகளை சேர்த்துள்ளது, என பாரத ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 80 சதவிகித கணக்குகள் செயல்பாடில் இருந்து இவற்றுக்கான செல்லுபடியாகும் காலம் 5 வருடங்கள் என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தது 90 லட்சம் அட்டைகளின் புதுப்பிப்பு காலம் ஏப்ரல் 2020 ல் வரும் என்று அர்த்தம். மேலும் மே 2015 ல், 60 லட்சத்துக்கும் அதிகமான அட்டைகள் சேர்க்கப்பட்டன இவை சரியாக அடுத்த மாதம் புதுப்பித்தலுக்கு வரும்.
SBI Indian Bank Debit Card Credit Card issue: கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்
கடந்த 5 வருடங்களில் வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு கணிசமான உயர்வு இருந்தது. மார்ச் 2015 நிலவரப்படி 55.24 கோடி டெபிட் அட்டைகளும் 2.11 கோடி கடன் அட்டைகளும் இருந்தன. அதே நேரம் ஜனவரி 2020 நிலவரப்படி 81.6 கோடி டெபிட் அட்டைகளும், 5.6 கோடி கடன் அட்டைகளும் நிலுவையில் உள்ளன, என பாரத ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
எஸ்.பி.ஐ. இருக்க பயமேன்..! வீட்டுக் கடன் சுலப வழிகள்
ஒவ்வொரு மாதம் வங்கிகளில் சராசரியாக 4 முதல் 5 மில்லியன் அட்டைகள் புதுப்பிக்க வருகின்றன ஒரு அட்டை ஐந்து வருடங்கள் செல்லுபடியாகும் என்ற அடிப்படையில். மூன்று மாதங்களுக்கு இந்த எண்ணிக்கை சுமார் 1.5 கோடி அட்டைகள் எண்ணிக்கை வரும். எனவே இது ஏராளமான வாடிக்கையாளர்களை பாதிக்கும் விஷயமாகும், என ஒரு வங்கி அதிகாரி தெரிவித்தார். வங்கிகள் அட்டைகளை வினியோகிப்பது தொடர்பாக இந்திய அஞ்சல் துறையை தொடர்பு கொண்ட போது அஞ்சல் துறையும் மறுத்துவிட்டது.
What are the options with customers?
வங்கிகள் தாங்கள் வழங்கிய அட்டைகளின் காலாவதி தேதியை தொழில்நுட்பரீதியாக நீட்டிக்கலாம் என்றாலும் அது மிகவும் கடினமான காரியம் என்கின்றனர் வங்கி தரப்பு. Cashless withdrawal மற்றும் virtual cards அகியவை தான் மாற்று வழிகள். அதிலும் virtual card களை மின்னணு பரிமாற்றத்துக்கு (e-transactions) மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஆனால் தற்போதைய சூழலில் முக்கிய தேவையான பணம் எடுக்க முடியாது என கூறப்படுகிறது. எனவே இதற்கான ஒரே தீர்வு, வாடிக்கையாளர்க்ள் வங்கி கிளைகளை அணுகி அவர்களின் தேவைக்கு பணம் எடுப்பது மட்டும் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.