Advertisment

பிக்சட் டெபாசிட் திட்டம் .. அடித்து சொல்லலாம் பெஸ்ட் வங்கி இதுதான்!

மூத்த குடிமகன்களுக்கு மட்டும் 7.75 சதவீதம் வட்டி விகிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici fixed deposit interest

icici fixed deposit interest

fixed deposit in icici bank : வங்கி தரும் வட்டி விகிதம், சலுகைகள், ஆண்டு பலன் இவை எல்லாவற்றையும் பார்த்த பின்பு தான் வாடிக்கையாளர்கள் வங்கியை தேர்வு செய்கின்றனர்.

Advertisment

அதிலும்,மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சேமிப்பதன் மூலம் மக்களால் இரட்டிப்பு பலன்களை பார்க்க முடியும். ஆனால் அதற்கு முன்பு பொதுமக்களாகிய நீங்கள் எந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகமான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு வங்கியை அணுக வேண்டும்.

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.

இதோ உங்களின் கவனத்திற்கு.. பிரபலமான வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ, போன்ற வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு தரும் வட்டி விகிதம்.

இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான்பா! இப்படி ஒரு சலுகையா?

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கியில், 1 கோடி வரையில் சேமிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எச்டிஎப்சி வங்கி :

எச்டிஎப்சி வங்கியை பொருத்தவரையில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி:

எஸ்பிஐ வங்கியில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.85 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.35 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

அவசர காலத்தில் அட்டகாசமான 3 வகை கடன் வசதிகள்.. வாரி வழங்கும் எஸ்பிஐ!

Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment