Advertisment

பேங்க்ல நகைக்கடன் வாங்க போறீங்களா? அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க!

தங்க கடன் வாங்கும் முன்பு பல வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold loans interest processing fees prepayment charges

Gold loans interest processing fees prepayment charges

Gold loans interest processing fees prepayment charges : தங்கம் - இந்த மஞ்சள் நிற உலோகத்தை நகைகளாக திருமணம் போன்ற மங்கல விழாக்களுக்காக அல்லது தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகை காலங்களில் வாங்கி வைத்திருப்பது இந்திய கலாச்சாரத்தில் ஒரு பழமையான பாரம்பரியமாகும். ஆண்டு முழுவதும் குடும்பத்திற்கு செல்வ செழிப்பை அது கொண்டு வருகிறது என்பதால் பெரும்பாலான இந்தியர்களுக்கு தங்கம் வாங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. அதுமட்டுமல்ல சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதும், 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,000 ஐ தொட்டுவிட்டதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சொத்து வகைகளில் தங்கம் தொடர்ந்து ஒரு பாதுகாப்பான முதலீடாக உள்ளது. அதுவும் குறிப்பாக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் ஒரு நிலையற்ற தன்மை நிலவி வரும் இக்காலகட்டத்தில்.

Advertisment

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

உயர்ந்து வரும் தங்கத்தின் விலையை போல இந்தியாவின் தங்க கடன் சந்தையும் கடந்த சில ஆண்டுகளில் வலுவான வளர்சியை கண்டுள்ளது. வீடு மற்றும் தனிநபர் கடன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, மக்கள் தங்களது குறுகிய கால தேவைகளுக்காக தங்கத்தை வங்கிகளிலோ அல்லது கிராம கடன் வழங்குபவர்களிடமோ அடமானம் வைத்து பணத்தை கடனாக பெற்றுக் கொள்கின்றனர். தனி நபர் கடன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தங்க கடன் குறைந்த வட்டி விகிதங்களில் மட்டுமல்லாது பல திருப்பி செலுத்தும் தவனை வாய்ப்புகளுடனும் கிடைக்கிறது. தங்க கடன் சந்தையில் சுமார் 40 சதவிகிதம் தென் இந்தியாவில் உள்ளது.

தங்க கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. நிதி நிறுவனங்களை பொருத்து தங்க கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை மாறுபடுகிறது. இந்தியாவில் சில வங்கிகள் கவர்ச்சிகரமான வட்டிவிகிதத்துடன் ரூபாய் 20 லட்சம் வரை தங்க கடனுக்கு எந்த வித செயலாக்க கட்டணமும் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தனித்துவமான சேவையுடன் வழங்கி வருகிறது.

மேலும் படிக்க : ரூ.10 லட்சத்துக்கு மேல் விலையுள்ள சொத்து வாங்கவோ விற்கவோ பான் கார்டு கட்டாயம்!

தங்க கடன் வாங்கும் முன்பு பல வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது. பல வங்கிகள் 0.20 முதல் 2 சதவிகிதம் வரை தங்க கடனுக்கு செயலாக்க கட்டணத்தை வசூலிக்கின்றன. பெரிய அளவிலான் தங்க கடன்களுக்கு செயலாக்க கட்டணமும் ஒரு குறிப்பிடதக்க பெரிய தொகையாக வரும் என்பதால், செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வங்கிகளை தங்க கடன் வாங்க தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க : ஈரோடுக்கு ஒரு டிக்கெட் பார்சல்… சைவ, அசைவ உணவுகளுடன் ரெடியாக காத்திருக்கும் ரயில் நிலையம்!

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment