எச்டிஎப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடியாக கடன்களை பெறக்கூடிய அருமையான வசதி உள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
எஸ்.பி.ஐ அளிக்கும் மிகச் சிறந்த கடன் வசதிகள்!
அதே போல் சேமிக்கும் போதே அதிகப்படியான லாபத்தை வழங்கும் திட்டங்களில் மியூட்சுவல் ஃபண்டுகளுகம் ஒன்று. இப்படி மியூட்சுவல் ஃபண்டு முதலீட்டு மேல், உங்களுக்கு அவசரம் என்றால் வங்கிகளில் கடனாக பெற முடியும் எந்தெந்த வங்கியில் இந்த வசதி இருக்கு என்று தெரிந்துக் கொள்ளலாமா?
hdfc mutual fund : எச்டிஎப்சி!
1. இதற்கு நீங்கள் முதலில் எச்டிஎப்சி வாடிக்கையாளராக இருக்க வேண்டும் மேலும் சிஏஎம்எஸ் லாகின் வசதியை பெற்றிருக்க வேண்டும்.
2. சிஏஎம்எஸ் சேவையை வழங்கும் 10 மியூட்சுவல் கம்பெனிகளுக்கு அவர்கள் இந்த வசதியை வழங்குகிறார்கள்.
சேமிப்பு பணம் குறித்த பயமே வேண்டாம்! எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான வசதிகள்
3. எச்டிஎப்சி வங்கியின் முகப்புப் பக்கத்திற்கு சென்று, பத்திரங்களுக்கு எதிரான கடன் என்கிற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
4. அடுத்த செயல்முறை இன்டர்நெட் பேங்கிங் வசதிக்கு லாக் இன் செய்து அதன் பிறகு உங்கள் சிஏஎம்எஸ் கணக்கிற்குள் நுழையுங்கள்.
ஐசிஐசிஐ கஸ்டமர்ஸ் இதை கவனிக்க மறந்திடாதீங்க.. ரொம்ப முக்கியம்!
5. சிஏஎம்எஸ் போர்ட்டலில் நீங்கள் லோன் வாங்க விரும்பும் நிதித் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி யை பெறுவீர்கள்.
மகிழ்ச்சியில் எச்டிஎப்சி வாடிக்கையளார்கள் : சூப்பர் டூப்பர் அறிவிப்பு!
6. ஒருமுறை ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தால் அதன் பிறகு நீங்கள் பெறக்கூடிய லோன் தொகையை நீங்கள் பார்க்கலாம்.