icici internet banking : இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று.தொழில்நுட்ப உலகில் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை நெட் பேங்கிங் மூலம் செய்வதையே பலரும் விரும்புகின்றனர். காரணம், அதில் இருக்கும் சிறப்பான வசதிகள் மற்றும் நேரம் குறைவு என்பதே.
வங்கிகளுக்கு நேரில் சென்று பணத்தை பிரித்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டனர்.
எஸ்.பி. ஐ -யில் இன்டர்நெட் பேங்கிங் யூஸ் பண்றீங்களா? முதலில் இதை படிங்க
பல்வேறு வசதிகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஐசிஐசிஐ வங்கியில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நெட் பேங்கிக் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை படியுங்கள்!
2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.
எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கவலையே பட வேண்டாம்.. உங்களுக்காக அருமையான திட்டம்!
3. நெஃப்ட் (NEFT)
10,000 ரூ வரை பணப்பரிமாற்றத்திற்கு ரூ. 2.50 ப்ளஸ் ஜிஎஸ்டி கட்டணம். 10,000 ரூ முதல் 1 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு ரூ. 5 ப்ளஸ் ஜிஎஸ்டி கட்டணம். 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு ரூ. 15 ப்ளஸ் ஜிஎஸ்டி கட்டணம்.
2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு ரூ. 25 ப்ளஸ் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.