சிறு, குறு தொழில் கடன்: லேட்டஸ்ட் மாற்றங்கள் என்ன தெரியுமா?

MSME Loan Online: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திருத்தப்பட்ட வரையறையில் சேவை மற்றும் உற்பத்திக்கு இடையில் உள்ள வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது

How to apply for MSME loan online? அரசு வழங்கியுள்ள புதிய வழிக்காட்டுதல்களின் படி முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடனுக்கு கூடுதல் வருவாய் (turnover) அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன சட்டம் (MSME Act) 2006, ரூபாய் 25 லட்சம் வரை முதலீடு உள்ள நிறுவனங்களை குறு நிறுவனம் என்றும், ரூபாய் 25 லடசம் முதல் ரூபாய் 5 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களை சிறு நிறுவனம் என்றும், ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களை நடுத்தர நிறுவனங்கள் என்றும் வரையறுத்தது. உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு இடையில் ஒரு வேறுபாடும் இருந்தது. எனவே சேவைகளை பொறுத்தவரை, குறு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூபாய் 10 லட்சம் வரை இருந்தது, சிறு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூபாய் 10 லடசம் முதல் ரூபாய் 2 கோடி வரையும், நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 5 கோடி வரையும் இருந்தது.

SBI Online And Timing: பொன்னான நேரம் முக்கியம், வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாமே?

இப்போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திருத்தப்பட்ட வரையறையில் சேவை மற்றும் உற்பத்திக்கு இடையில் உள்ள வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூபாய் 1 கோடி வரை முதலீடு உள்ள அதே சமயம் ரூபாய் 5 கோடிக்கு குறைவான வருவாய் (turnover) உள்ளது குறு நிறுவனம் என்றும், ரூபாய் 10 கோடி வரை முதலீடு மற்றும் ரூபாய் 50 கோடி அளவுக்கு வருவாய் உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனம் என்றும், ரூபாய் 20 கோடி வரை முதலீடு மற்றும் ரூபாய் 100 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்கள் என்றும் வரையறை செய்யப்படும். இந்த புதிய மாற்றங்கள் ஒரு தொடக்க அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் வணிகத்தை வளர்க்க உதவுவது மட்டுமல்லாமல், வகைப்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையுடன் அதிக நன்மைகளைப் பெறவும் இது உதவுகிறது. இயந்திரங்களில் முதலீடு செய்வதை விட GST தரவைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் வருவாயை சரிபார்க்க இது அரசாங்கத்தை அனுமதிக்கும்.

ஆன்லைன் மூலம் எவ்வாறு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் (MSME loan) பெற விண்ணப்பிப்பது

MSME கடனுக்கு தேவையான ஆவணங்கள்

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.

அடையாள சான்று: கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், பான் அட்டை (PAN card), வாக்காளர் அடையாள அட்டை.

உறைவிட சான்று: கடவுச்சீட்டு, குத்தகை ஒப்பந்தம், வர்த்தக உரிமம், தொலைபேசி மற்றும் மின்சார ரசீது, ரேஷன் அட்டை மற்றும் விற்பனை வரி சான்றிதழ்.

வயது சான்று: கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய நிரந்தர கணக்கு எண் அட்டை (Photo PAN card).

நிதி ஆவணங்கள்

கடந்த 12 மாதங்களுக்கான வங்கி அறிக்கை (bank statement)

வணிக பதிவு ஆதாரம் (Business registration proof)

உரிமையாளரின் (Proprietors) PAN அட்டை நகல்

Partnership deed copy

ஏ.டி.எம். மோசடி: அலட்சியம் வேண்டாம்… எஸ்.பி.ஐ தரும் 10 டிப்ஸ்

நிறுவனத்தின் (Company) PAN அட்டை நகல்

P&L and balance sheet copy of last 2 years

விற்பனை வரி ஆவணம் (Sales tax documents)

நகராட்சி வரி ஆவணம் (Municipal tax document)

ஒரு MSME கடனுக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது ?

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவுக்கான அதிகாரப்பூர்வ வலைதள முகவரிக்கு //udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx , செல்லவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close