Post Office RD Account: அஞ்சல் அலுவலக Recurring deposit (RD) என்பது மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டம். ஐந்து வருட அஞ்சல் அலுவலக RD உட்பட அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டி விகிதத்தை அரசு கனிசமாக குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் 30 ஜூன் 2020 வரை பொருந்தும். சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும். சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு அஞ்சல் அலுவலக recurring deposit திட்டம் புதிய முதலீட்டாளர்களுக்கு 5.8 சதவிகிதம் வட்டியை பெற்றுத் தரும்.
India Post Payments Bank (IPPB) ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் ஆன்லைன் மூலமாக அஞ்சல் அலுவலக RD களில் டெபாசிட் செய்யலாம். மாதாந்திர RD தவனை தொகையை ஆன்லைன் மூலமாக இந்த ஆப்-ஐ பயன்படுத்தி உங்களுடைய RD கணக்குக்கு மாற்றம் செய்யலாம். இதன் மூலம் RD கணக்கில் உங்கள் தவனை தொகையை செலுத்த தபால் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம்.
அரசு அறிவிப்பு: வருமான வரி ரீபண்ட் பணத்தை துரிதமாக பெறுவது எப்படி?
IPPB மூலமாக உங்கள் பணத்தை அஞ்சல் அலுவலக RD கணக்கில் மாற்றுவது எப்படி?
1) உங்கள் வங்கி கணக்கிலிருந்து IPPB கணக்கில் பணத்தை சேர்க்கவும்
2) DOP Products என்பதற்கு சென்று Recurring Deposit என்பதை தேர்ந்தெடுக்கவும்
3) உங்களுடைய RD கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ID ஐ எழுதவும்
4) தவனை காலம் (installment duration) மற்றும் தொகையை தேர்ந்தெடுக்கவும்
5) IPPB mobile application மூலமாக payment transfer செய்தது வெற்றிகரமாக முடிந்தது என்று பின்னர் அறிவிக்கும்.
புதிய வாடிக்கையாளர்களுக்கு IPPB mobile app
அடிப்படை பதிவு செயல்முறைக்கு ஒரு முறை அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். உங்களுடைய டிஜிட்டல் சேமிப்பு கணக்கு திறக்கப்பட்ட உடன், நீங்கள் அனைத்து பரிமாற்றங்களையும் எளிதாக ஆன்லைன் மூலமாக செய்யலாம்.
எஸ்.பி.ஐ.-ன்னா சும்மாவா? 44 கோடி பேருக்கான இரட்டைச் சலுகை
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு IPPB mobile app
கணக்கு எண், வாடிக்கையாளர் ID (CIF) மற்றும் பிறந்த தேசி ஆகிய விவரங்களை உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மூலம் தெரிவிக்கவும்.
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (one-time-password OTP) அனுப்பப்படும்.
MPIN ஏற்படுத்தி, OTP ஐ உள்ளீடு செய்யவும்.
ஊரடங்கு காரணமாக ஐந்து வருட அஞ்சல் அலுவலக RD களுக்கான அபராத கட்டணத்தை அரசு தற்காலிகமாக தள்ளுபடி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.