tax regime, old tax regime, new tax regime, income tax regime, income tax slabs, வருமான வரித்துறை, புதிய வருமான வரி
Income tax india efiling: இந்த ஆண்டு, தங்கள் வருமான வரி அறிவிப்புகளை (income tax declarations) நிறுவனங்களுக்கு tax deduction at source(TDS) நோக்கத்திற்காக செய்யும் போது, வரி செலுத்துபவர்களுக்கு ஒரு தனித்துவமான சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அது என்னவேன்றால் பாரம்பரிய பழைய வரி முறையை தேர்ந்தெடுப்பதா அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி முறையை தேர்ந்தெடுப்பதா என்பதுதான்.
Advertisment
பழைய வரி முறை (Old tax regime)
பழைய வரி முறை 3 அடுக்கு வரி விகித அடுக்குகளை வழங்குகிறது: 5 சதவிகிதம், 20 சதவிகிதம் மற்றும் 30 சதவிகிதம் முறையே வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ரூபாய் 5 லட்சம் வரை, ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் ரூபாய் 10 லட்சம் வரை மற்றும் ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் வருமானம். பழைய வரி முறையின் கீழ் வரி வருவாயை கணக்கிடும் போது, தனிநபர்கள் வரி இல்லாத சலுகைகளான Leave Travel Concession (LTC), வீட்டு வாடகை படி (House Rent Allowance HRA) மற்றும் இதர சலுகைகளையும் கோரலாம். இந்த வரி முறிவுகள் (tax breaks) வரி விதிக்கக்கூடிய வருமானத்தை கணிசமாகக் குறைக்கின்றன.
மாற்று வரி முறை குறைந்த வரி விகிதங்களில் ஆறு அடுக்குகளை வழங்குகிறது. வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டங்களின் கீழ் கிடைக்கும் 70 விலக்குகள் மற்றும் கழித்தல்களை தவிர்த்துவிட்டால். புதிய வரி விகிதங்கள் : 5 சதவிகிதம், 10 சதவிகிதம், 15 சதவிகிதம், 20 சதவிகிதம், 25 சதவிகிதம் மற்றும் 30 சதவிகிதம் முறையே வருமான அடுக்குகளுக்கு ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ரூபாய் 5 லட்சம் வரை, ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் ரூபாய் 7.5 லட்சம் வரை, ரூபாய் 7.5 லட்சத்துக்கு மேல் ரூபாய் 10 லட்சம் வரை, ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் ரூபாய் 12.5 லட்சம் வரை, ரூபாய் 12.5 லட்சத்துக்கு மேல் ரூபாய் 15 லட்சம் வரை மற்றும் வருமானம் ரூபாய் 15 லட்சத்துக்கு அதிக வருமானம்.
ரூபாய் 5 லட்சம் வரை வருமானம் இரண்டு வரி விதிகளின் கீழும் விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு (The choice)
புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்கள் குறைந்த வரிகளை விளைவிக்க வேண்டும். வரி நிவாரணங்களைக் கோருவதற்காக முதலீடுகளைச் செய்தவர்கள் புதிய வரி முறையை கவர்ச்சிகரமானதாகக் காண மாட்டார்கள்
வீட்டு கடன் இல்லாத வரி செலுத்துபவர்கள், வாடகை இல்லாத குடியிருப்பில் தங்குபவர்கள் மற்றும் சிறிய அல்லது எந்தவித முதலீடுகளும் செய்ய விரும்பாதவர்கள் புதிய வரிமுறையை பயணளிப்பதாக கூறுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil