சென்னையை தலைமையிடமக கொண்டு இயங்கும் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Padmaja Chunduru இதற்கான காசோலையை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளார் K சண்முகத்திடம் அளித்தார்.
இது தவிர தமிழ்நாடு கிராம வங்கி (Tamil Nadu Grama Bank) ஊழியர்களின் பங்களிப்பு தொகையான ரூபாய் 25.38 லட்சத்தையும் அவர் வழங்கியுள்ளதாக ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியன் வங்கியின் ஏடிஎம் கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாகவும், வங்கியின் டிஜிட்டல் சேவைகளும் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்காக உகந்ததாக செயல்படுவதாகவும், வங்கி எடுத்துள்ள முயற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் (corporates), ஓய்வூதியர்கள், சம்பளம் வாங்கும் ஊழியர்கள், கோழி ப்ண்ணை மற்றும் வேளாண் தொழில் துறையினருக்கு அவர்களின் வர்த்தகத்துக்கு உதவுவதற்காக வங்கி முன்பு கோவிட் அவசர கடன்களை அறிமுகப்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”