பெருமைப்படுங்க, இந்தியன் வங்கி வாடிக்கையாளரா… என்ன செய்தது தெரியுமா?

Indian Bank: கோழி பண்ணை மற்றும் வேளாண் தொழில் துறையினருக்கு அவர்களின் வர்த்தகத்துக்கு உதவுவதற்காக வங்கி முன்பு கோவிட் அவசர கடன்களை அறிமுகப்படுத்தியது.

By: Updated: May 7, 2020, 08:25:44 PM

Indian Bank Tamil Nadu News: கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்திற்காக இந்தியன் வங்கி தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.


கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பொது துறை வங்கியான இந்தியன் வங்கி தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக அளித்துள்ளது.

கடன், தவணை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளின் இந்த முக்கிய ‘அப்டேட்’ தெரிஞ்சுகோங்க!

சென்னையை தலைமையிடமக கொண்டு இயங்கும் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Padmaja Chunduru இதற்கான காசோலையை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளார் K சண்முகத்திடம் அளித்தார்.

இது தவிர தமிழ்நாடு கிராம வங்கி (Tamil Nadu Grama Bank) ஊழியர்களின் பங்களிப்பு தொகையான ரூபாய் 25.38 லட்சத்தையும் அவர் வழங்கியுள்ளதாக ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியன் வங்கியின் ஏடிஎம் கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதாகவும், வங்கியின் டிஜிட்டல் சேவைகளும் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்காக உகந்ததாக செயல்படுவதாகவும், வங்கி எடுத்துள்ள முயற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைக்க முடியா அம்பானி; ஆளுமை செலுத்தும் தமிழர்கள் – ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் 2020

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் (corporates), ஓய்வூதியர்கள், சம்பளம் வாங்கும் ஊழியர்கள், கோழி ப்ண்ணை மற்றும் வேளாண் தொழில் துறையினருக்கு அவர்களின் வர்த்தகத்துக்கு உதவுவதற்காக வங்கி முன்பு கோவிட் அவசர கடன்களை அறிமுகப்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Indian bank donates rs 1 crore to tamil nadu government fight against covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X