Multi-year Health Insurance Policy: இன்றைய வேகமான உலகில் மருத்துவ காப்பீடு என்பது ஒரு option என்பதை தாண்டி ஒரு தேவையாக மாறி வருகிறது. சமீப நாட்களாக மன அழுத்த நிலையும், மருத்துவ சிகிச்சைகான செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மருத்துவ காப்பீடு ஒர் கேடயமாக இருந்து எதிர்பாராதவிதமாக உங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளிலிருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கிறது. மருத்துவ காப்பீட்டை வாங்குவதற்கு நீங்கள் இன்னும் அதிகப்படியான காரணங்களை தேடினால் - இதோ ஒன்று மருத்துவ காப்பீடு உங்களுக்கு வரி சேமிப்பை அளிக்கும். எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள மேலும் வாசியுங்கள்.
வரி சேமிப்புக்கான கருவி
வரி சேமிப்பு என்பதுதான் எந்தவொரு நிதி சேமிப்பு திட்டத்திற்குமான முக்கிய அம்சம். மருத்துவ காப்பீடு பணத்தை உங்கள் வங்கியில் பாதுகாப்பாக வைக்க மட்டுமல்ல, இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80D ன் கீழ் வரி சலுகைகளை பெறவும் உதவுகிறது. வருடாந்திர வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீது வரி சலுகையை அந்த ஆண்டுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி-யின் iMudraவுக்கு இவ்வளவு பவரா? அடேங்கப்பா!
பிரிவு 80 C மற்றும் 80 D இடையேயான வேறுபாடுகள்
மக்கள் பல்வேறு வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பிரிவு 80C ன் கீழ் வரி சலுகையை பெறலாம். அதேசமயம் பிரிவு 80 D மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மருத்துவ காப்பீட்டை உங்களுக்கு, குழந்தைகளுக்கு அல்லது பெற்றோருக்கு வாங்கி நீங்கள் பிரிவு 80 D ன் கீழ் வரியை சேமிக்கலாம்.
பிரிவு 80 D விலக்குகளிலிருந்து எவ்வாறு பயனடைவது?
பிரிவு 80 D ன் கீழ் பொருந்தும் வரி விலக்குகளை புரிந்து கொள்ள உதவும் ஒரு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது நிதியாண்டு 2019-2020 க்கான அட்டவணை
பல ஆண்டு திட்டட்தின் வரி பலன்கள்
பல ஆண்டுகளுக்கு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வாங்க காப்பீட்டு நிறுவனங்கள் பல சமயம் சலுகைகளை வழங்கும். இந்த வழியில் பிரீமியம் ஒரு நிலையான விகிதத்தில் இருக்கும். மேலும் நீங்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டீர்கள். எனினும் நீங்கள் ஒரு கூடுதல் தொகையை பல ஆண்டு காப்பீடுக்காக வெளிப்படையாக செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருக்கும் நண்பர்களே - நீங்கள் இப்படியும் ஏமாறலாம்
பணம் செலுத்தும் முறை
மருத்துவ காப்பீட்டில் வரிச் சலுகையை பெற பிரீமியம் தொகையை பணமாக இல்லாமல் வேறு எதாவது ஒரு முறையில் செலுத்தப் பாருங்கள். இணைய வங்கி பரிவர்த்தனை , டெபிட் அட்டை அல்லது செக் ஆகிய முறைகளில் செலுத்த பாருங்கள்.
Get Covered, Save Tax
மருத்துவ காப்பீட்டை வாங்குவதன் முக்கிய நோக்கம் ஒரு வேளை பெரிய மருத்துவ செலவு வந்தால் அதிலிருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்க, மருத்துவ காப்பீடை ஒரு வரி சேமிப்பு கருவியாக பயன்படுத்துவது ஒரு கூடுதல் நன்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”