New ATM rules every bank customer needs to know : ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் ஆர்.பி.ஐயின் புதிய ஏ.டி.எம். சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு அமைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நீங்கள் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கிறீர்கள் என்பது தொடர்பாக கொஞ்சம் விழிப்புடன் இருங்கள்.
ஆர்.பி.ஐ அறிவித்துள்ள இந்த நான்கு புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
நிதி சிக்கல் பிரச்சனையா? தங்க நகைகளை விற்பதற்கு முன்பு இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
New ATM rules
ஆகஸ்ட் 1, 2021 முதல், நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ .15ல் இருந்து ரூ. 17 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 5ல் இருந்து ரூ. 6 ஆக அதிகரித்துள்ளது.
ஏடிஎம்கள் தங்கள் சொந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக வங்கிகளால் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களால் பரிமாற்ற வருமானத்தை ஈட்டக்கூடிய சேவைகளையும் ஏ.டி.எம்.கள் ஏடிஎம்கள் தங்கள் சொந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக வங்கிகளால் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளையும் வழங்குகிறது. இதனால் கூடுதல் வருமானங்களை வங்கிகள் ஈட்டுகின்றன.
15 வருடத்தில் ரூ. 40 லட்சம் வரை ரிட்டர்ன்ஸ்… இந்த ரிட்டைர்ட்மென்ட் ப்ளான் பத்தி கொஞ்சம் யோசிங்க!
அனுமதிக்கப்பட்ட இலவச பண பரிவர்த்தனைகளை தாண்டி கூடுதலாக பணம் எடுக்கும் போது ஒவ்வொரு ட்ரான்சக்சனுக்கும் ரூ. 21 வரை கட்டணம் வசூலிக்க ஆர்.பி.ஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செயல்முறை ஜனவரி 1 , 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது.
தாங்கள் கணக்குகள் வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து 5 முறை வாடிக்கையாளர்கள் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
பிற வங்கி ஏடிஎம்களிலிருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கும் (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) வாடிக்கையாளர்கள் தகுதியுடையவர்கள். மெட்ரோ மையங்களில் மூன்று பரிவர்த்தனைகள் மற்றும் மெட்ரோ அல்லாத மையங்களில் ஐந்து பரிவர்த்தனைகள். இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil