நாடெங்கும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) யின் கிளைகளை மூடி விட்டு அவற்றை ’ஈ கார்னர்’களாக மாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இந்த மாதம் பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியின் கிளைகளை மூடவோ அல்லது வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவோ அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தோராயமாக தற்போது எஸ்பிஐ யில் உள்ள ஊழியர்களின் பலம் 2.5 லட்சம் என்றும், மார்ச் 2021 க்குள் இவ்வங்கியில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் எண்ணம் எதுவும் இல்லை. மேலும் நாடெங்கும் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளை மூடும் எண்ணமோ அவைகளை ’ஈ கார்னர்’களாக மாற்றம் செய்யும் எண்ணமோ அரசிடம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உங்களின் 'ட்ரீம் டெஸ்டினேசனிற்கான’ சுற்றுலாவை எளிமையாக்க டிப்ஸ் இதோ!
நாடெங்கும் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளை மூடிவிட்டு அவற்றை ஈ கார்னர்களாக மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதா என பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் மார்ச் 2021க்குள் எஸ்பிஐ யில் உள்ள 16 லட்சம் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முன்மொழிந்ததா என்றும் அந்த உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil "
நாடு குறைந்தபட்சம் 16 லட்சம் சம்பளதாரர்க்ளை நிதி ஆண்டு 2020ல் உருவாக்குகிறது என எஸ்பிஐ’யின் ஒரு ஆய்வு ஜனவரியில் கூறியிருந்தது. இந்திய பொருளாதாரம் நிதியாண்டு 2020’ல் 5 சதவிகிதம் (எஸ்பிஐ 4.6 சதவிகிதம்) வளர்சியடைய வாய்புள்ளது. இந்த மெதுவான வளர்சியின் தெளிவான தாக்கம் சம்பளதாரர்களின் உருவாக்கத்தில் நன்றாக தெரிகிறது. நிதியாண்டு 2019 ல் இந்தியா 89.7 லட்சம் புதிய சம்பளதாரர்க்ளை உருவாக்கியதாக தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன தகவல்கள் தெரிவித்தன. நிதியாண்டு 2020 ல் தற்போதைய திட்டமிடுதலின்படி இந்த எண்ணிக்கை குறைந்தது 15.8 லட்சம் குறைவாக இருக்கலாம், என எஸ்பிஐயின் ஆய்வரிக்கை மேலும் தெரிவிக்கிறது.
வருமான வரியை சேமிக்க உதவும் ஃபிக்சட் டெபாசிட்களை எந்த வங்கியில் துவங்கலாம்?