sbi internet banking online : எஸ்பிஐ யில் வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இந்த மேட்டரே உங்களுக்கு தான். என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு இங்கே வாங்க. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது முக்கிய தகவலும் கூட. பொதுவாகவே வங்கி கணக்கில் பணம் எடுக்க எடுக்கவேண்டுமென்றால் அதிக நேரம் எடுக்கும். காரணம், செல்லான் நிரப்பி வரிசையில் நின்று பணத்தை பெறுவதற்குள்போதும் போதும் போதும் என்று ஆகிவிடும். போதாத குறைக்கு வங்கிக்கு ஒரு அரை மணி நேரம் லேட்டாக சென்றுவிட்டால் போதும், அடுத்த தெரு வரை கியூ நிற்க ஆரம்பித்துவிடும்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க...: ஆன்லைனிலேயே மொபைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..
அதற்கு மாற்று வழியாக வந்தது தான் ஏடிஎம் சேவை. நினைத்த நேரத்தில் ஏடிஎம்மில் சென்று பணத்தை எடுக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். வங்கிக்கு சென்று ஏடிஎம் கார்டை வாங்க வேண்டும். சரி எஸ்பியில் எப்படி ஏடிஎம் கார்டு வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்களின் அடையாள அட்டை, வீட்டு முகவரி மற்றும் புகைப்படத்துடன் வங்கிக்கு சென்று அங்கு தரும் ஏடிஎம் விண்ணபத்தை நிரப்பி அளித்தால் 1 வாரத்தில் ஏடிஎம் கார்டு உங்கள் வீட்டில் இருக்கும்.
எஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்?
அப்படி இல்லையென்றால் ஆன்லைன் வழிமுறை. எஸ்பிஐ ஆன்லைன் தளத்திற்கு சென்று அங்கு ஏடிஎம் கார்டு அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் விவரங்களை கேட்கும் அனைத்தையும் பூர்த்தி செய்தால் 24 மணிநேர்த்தில் எஸ்பிஐ கார்டு உங்கள் கையில்.
வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா? எஸ்பிஐ -யின் புதிய அறிவிப்பு தெரியுமா?