லாக் டவுனில் பிரயோஜனமா இதை செய்யுங்க: ஸீரோ பேலன்ஸில் எஸ்.பி.ஐ அக்கவுண்ட்

SBI: கணக்கு திறப்பதற்கான படிவத்தை (AOF) உங்கள் வசதிக்கு ஏற்ப நிரப்பலாம் மேலும் பிழைகள் உள்ளனவா என சரிப்பார்க்கவும் செய்யலாம். விண்ணப்பதாரரின் விவரங்கள் கணிப்பொறியில் இருப்பதால் வங்கி கிளையில் கணக்கு திறக்க எடுக்கும் நேரம் குறைக்கப்படும்.

By: Published: April 23, 2020, 7:52:32 PM

State Bank Of India: பூஜ்ஜிய இருப்பு அம்சத்துடன் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு திறப்பது இப்போது சாத்தியமாகும். சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிப்பதை எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்த பிறகு, பூஜ்ஜிய இருப்பு சேமிப்பு கணக்கை திறப்பது இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியான எஸ்பிஐயில் இப்போது சாத்தியமாகிறது. ஆன்லைன் மூலமாக எஸ்பிஐ கணக்கு திறக்க எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com ற்கு சென்று, சிறு மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குக்கான விண்ணப்பதை ஆன்லைன் மூலமாக நிரப்ப வேண்டும்.


தேவைப்படும் விவரங்களை ஆன்லைனில் நிரப்பி சமர்பிக்கவும். அடுத்து, கணக்கு திறப்பதற்கான படிவத்தை (Account Opening Form -AOF) A4 அளவிலான காகிதத்தில் அச்சிட்டுக் கொள்ளவும். AOF ல் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களான அடையாளத்துக்கான ஆவணம், முகவரி சான்று, மற்றும் புகைப்படத்தை இணைத்து, ஆன்லைனில் generate ஆகும் SCRN (Small Customer Reference Number) ஐயும் குறித்துக் கொள்ளவும். விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கும் SCRN அனுப்பப்படும்.

ஆன்லைனில் தங்க பத்திர திட்டத்துக்கு விண்ணப்பிங்க – அட்டகாச தள்ளுபடி பெறுங்க

ஆன்லைன் மூலமாக எஸ்பிஐ கணக்கு திறப்பதில் உள்ள நன்மைகள்

கணக்கு திறப்பதற்கான படிவத்தை (AOF) உங்கள் வசதிக்கு ஏற்ப நிரப்பலாம் மேலும் பிழைகள் உள்ளனவா என சரிப்பார்க்கவும் செய்யலாம். விண்ணப்பதாரரின் விவரங்கள் கணிப்பொறியில் இருப்பதால் வங்கி கிளையில் கணக்கு திறக்க எடுக்கும் நேரம் குறைக்கப்படும்.

படிப்படியாக எஸ்பிஐ ஆன்லைனில் கணக்கு திறக்கும் செயல்முறை

onlinesbi.com என்ற இணையதள முகவரிக்கு சென்று வாடிக்கையாளர் விவரப் பகுதியை பூர்த்திச் செய்யவும்.

நீங்கள் பகிரவேண்டிய தகவல்கள்

ஒரு கணக்கை திறக்க நீங்கள் பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்.

1. உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் (KYC-Know Your Customer) தகவல்கள். ஏற்றுக்கொள்ளக்கூடிய KYC ஆவணங்கள் AOF மெனுவில் கொடுக்கப்பட்டிருக்கும்.

எஸ்.பி.ஐ. இருக்க பயமேன்..! வீட்டுக் கடன் சுலப வழிகள்

2. நீங்கள் திறக்க நினைக்கும் சேமிப்பு கணக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் உங்கள் கணக்கில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் வசதிகள்.

3. உங்களுக்கு நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number PAN) இல்லையென்றால் Form 60 வேண்டும்.

4. நீங்கள் nomination ஏற்படுத்த நினைத்தால் Form DA-1 (விரும்பினால்) தேவைப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi online account opening with zero balance savings state bank of india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X