கடன்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை மட்டும் வாங்கவே கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால், கடனே இல்லாதவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாகவே இருக்கிறது இந்த காலத்தில். ஆபீஸில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கடன், மனை மற்றும் சொந்த வீடு வாங்கக் கடன், வாகனக் கடன் என இன்றைக்கு கடன் வலையில் சிக்கியவர்கள் பலர்.
இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்ப தால் எடுத்த தெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற் று க்கு ஆதாரம் கொடுக்க வேண் டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாத ங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.
சேமிப்பு பணம் குறித்த பயமே வேண்டாம்! எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான வசதிகள்
பெர்சல லோனை கண்டு பயப்படுபவர்கள் முதலில் இதையெல்லாம் தெரிந்துக் கொள்ளுங்கள். பின்பு பயப்படாமல் பெர்சனல் லோனை வாங்குங்கள்
நீங்கள் கவனிக்க வேண்டியவை:
1. கடன் கேட்டு விண்ணப்பம் செய்வதற்கு முன் உங்கள் தகுதியை தீர்மானித்து கொள்ளுங்கள்.
2. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. தனிநபர் கடன்கள்தான் வராக்கடன்களாக உயர்ந்துள்ளதாம்.
3. தனி நபர் கடன்களின் மீது 11 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை வட்டியை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.
4. முன்கூடியே கடனை செலுத்தும் போது கூட வட்டி விகிதத்தை கவனிக்க வேண்டும். ஏனெனில் கடனை திரும்ப செலுத்தக்கூட வட்டி போடப்படுமாம்.
வங்கிகள் யார் யாருக்கு எதன் அடிப்படையில் கடன் வழங்கும் தெரியுமா?
எப்போது தனி நபர் கடன் ஆபத்தாகிறது?
1. தனி நபர் கடனாக பெற்ற பணத்தினைப் பங்கு சந்தை அல்லது பிற ரிஸ்க் முதலீடுகளை செய்யும் போது,
2. சொந்த பிஸ்னஸ், வீடு, வாகனம் வாங்க தனிநபர் கடனை வாங்கும் போது,
3. விருப்பாமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக தனிநபர் கடன் வாங்குவது,
4. பிறரின் தேவைக்காக உங்களது பெயரில் தனி நபர் கடன் பெற்று கொடுப்பது,
எச்டிஎப்சி வங்கியில் கடன்பெற இப்படியொரு அருமையான வசதியா?