Advertisment

சிபிஎஸ்இ இதுவரை செய்த மாற்றங்கள் என்னென்ன? ஒரு முழு அலசல்

CBSE Board: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த 2 மாதங்களில் 2020 மற்றும் 2021 வாரியத் தேர்வுகளுக்கான  நடைமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்திருந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE affiliated Schools are advised to used only new political map of india :

CBSE affiliated Schools are advised to used only new political map of india :

சிபிஎஸ்இ போர்டு தேர்வு 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)  கடந்த 2 மாதங்களில் 2020 மற்றும் 2021 வாரியத் தேர்வுகளுக்கான  நடைமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்திருந்தது .

Advertisment

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வு:  

இதில் முக்கியமான ஒன்று பத்து மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் அதிகரிப்பு.   10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுக் கட்டணங்களை முறையே 200 மற்றும் 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தவிர, இடம்பெயர்வு கட்டணத்தையும்  ரூ .150 வரை அதிகரித்துள்ளது.  எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பார்த்தல், இப்போது  தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஒரு மாணவருக்கு ஏற்பட்டால் இனி வரும் சூழலில் ரூ .5000 வரை செலவிட வேண்டியிருக்கும்.

மேலும், விவரங்களுக்கு:

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு: ஏன்? எதற்கு? எப்படி?

சிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு

10, 12 ஆம் வகுப்புக்கு பாடத் திட்டங்களை  மாற்றம் இல்லை:

10 மற்றும் 12 வகுப்புகளில் புதிதாய் பாடத் திட்டங்களை மாற்றும் கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று வாரியம் அதன் இணைந்த பள்ளிகளைக் கேட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, கல்வி ஆண்டின்  தொடங்குவதற்கு  முன் அதாவது ஜூலை 15 க்கு முன்னர் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தால், சிபிஎஸ்இ பள்ளிகள் அதை பரிசீலீக்கலாம். இருந்தாலும், மாணவர்களும் பெற்றோருகளும் போதுமான காரணங்களை முறையே சமர்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு:

CBSE Class 9, 11 Admission Rules: சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு, வரிசை கட்டும் அட்மிஷன் சிக்கல்கள்!

அப்ஜக்டிவ்  கேள்விகள், அதிக இன்டர்னல் மதிப்பெண்கள் :

2020 ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு தாளிலும் பல மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. உதரணமாக விரிவான விடைகளை குறைத்து  அப்ஜக்டிவ் கேள்விகளுக்கு அதிகம் முக்கொயத்துவம் கொடுக்க உள்ளது . எல்லா பாடத் திட்டத்திற்கும்  ப்ராக்டிகள் கொண்டு  வந்து இன்டர்னல் மதிப்பெண்ணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது.

மேலும்,விவரங்களுக்கு:

சிபிஎஸ்இ தேர்வு முறை மாற்றம்: பலன் கிடைக்குமா? நிபுணர்கள் கருத்து

9, 11 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பதிவு பற்றி :

சிபிஎஸ்இ மாணவர் சேர்க்கை: உடனடியாக அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்

2019-2020 வகுப்புகளுக்கான 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவுமுறையை  இந்த வருடம் ஆகஸ்ட் 8 முதலே தொடங்கியது . வழக்கமாக, அக்டோபரில் ஆரம்பிக்கும் இந்த பதிவு முறை  இந்த வருடம் இரண்டு மாதாங்களுக்கு முன்பே, தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முன்பதிவிற்கான முக்கிய நெறிமுறைகளையும், தகவல்களையும்  (CBSE/Reg/112510/2019) என்ற ஆணை மூலம் வெளியீட்டது  சிபிஎஸ்இ

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment