SSC CGL, CHSL, UPSC Recruitment: 2020ம் ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே:
எஸ்.எஸ்.சி தேர்வுகள்: புத்தாண்டின் முதல் மாதத்தில், எஸ்.எஸ்.சியின் தேர்வு பணிக்கான Phase 8 அறிவிப்பு வெளியிடப்படுகிறது. விண்ணப்ப செயல்முறை ஜனவரி 17 முதல் பிப்ரவரி 14ம் தேதிவரை நடைபெறுகிறது. அதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு 2020ம் ஆண்டு ஜூன் 10 முதல் 12 வரை நடைபெறும்.
டெல்லி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எஸ்.எஸ்.சி சிபிஓ 2020, சிஏபிஎஃப் தேர்வு 2020- க்கான புதிய அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். அதற்கான,தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறவிருக்கிறது.
தயாராவது ஓகே... ஜெயிப்பது எப்படி? - டிஎன்பிஎஸ்சிக்கு ரெடியாகும் முன் இதைப் படிங்க
எஸ்எஸ்சி சிஜிஎல் (CGL) 2020, சிஎச்எஸ் (CHS)2020 தேர்வு தேதி அறிவிப்புகள் முறையே செப்டம்பர் 15 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் வெளியிடப்படுகிறது. எவ்வாறாயினும்,தேர்வுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
யுபிஎஸ்சி தேசிய குடிமைப்பணி தேர்வுகள்:
ஜனவரி 8 ஆம் தேதி, யுபிஎஸ்சி என்டிஏ (தேசிய பாதுகாப்பு பயிற்சி) 2020-ம் ஆண்டு விவரங்களை வெளியிடும். விண்ணப்பங்கள் ஜனவரி 29 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்வு ஏப்ரல் 19 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
பிப்ரவரி 12 ஆம் தேதி, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மற்றும் யுபிஎஸ்சி இந்திய வன சேவைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் மார்ச் 3 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்வுகள் 2020ம் ஆண்டு மே 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி ஐஇஎஸ்/ஐஎஸ்எஸ் (IES/ISS) தேர்வு 2020ம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூன் 26ம் தேதியும் நடைபெறும்.
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் அறிவிப்பைத் தொடர்ந்து யுபிஎஸ்சி மத்திய ஆயுத போலீஸ் படைகள் (ஏசி) அறிவிப்பு வெளியிடப்படும். தேர்வுகள் முறையே ஜூலை 9 மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்
ரயில்வே ஆட்சேர்ப்பு :
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) 2018-19ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை 2020 ஜனவரியில் வெளியிடும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதனால், இந்த ஆண்டில் பல்லாயிரக்கணக்கான வேட்பாளர்கள் தங்கள் பணி சேர்ப்பு கடிதத்தை பெறுவார்கள்.
மேலும், 2020ம் ஆண்டில் 3 லட்சம் பணிகள் ரயில்வே மூலம் நிரப்பப்படும் என்றும் கோயல் தெரிவித்தார். இதனால் ரயில்வே துறையில் இந்த ஆண்டு மற்றும் 2,621 கெசட்டட் அலுவலர் மட்ட பணிகளும், 3,03,606 பணிகள் கெசட்டட் அல்லாத பதவிகளும் நிரப்பப்படுகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்பி என்டிபிசி தேர்வின் அட்மிட் கார்ட் மற்றும் தேர்வு தேதிகள் 2020ம் ஆண்டில் வெளியிடப்படும் . அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,தேர்வு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், ஆர்ஆர்பி ஜூனியர் இன்ஜினியர், ஆர்ஆர்பி ஏஎல்பி டெக்னீசியன் போன்ற பிற ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்துவதில் வாரியம் மும்முரமாக இருந்ததால், ஆர்ஆர்பி என்டிபிசி இந்த ஆண்டும் நடத்த முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.