TNPSC 2020 Group I official Notification Released : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Advertisment
2020ம் ஆண்டிற்கான குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் I தேர்வில் விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கல்வி தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் போன்ற அனைத்து தகவல்களையும் டிஎன்பிஎஸ்சி வரும் நாட்களில் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் படும் என்று கூறியுள்ளது. வழக்கத்தை போல, குரூப் I தேர்வு விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலம் பெறப்படும் என்று நம்பப்படுகிறது.
ஆர்வமுள்ள தேர்வர்கள், tnpsc.exams.in , tnpsc.exams.net, tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் I 2019 தேர்வு 139 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் I தேர்வுமுறை:
பொதுவாக குரூப் I தேர்வில் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று அடுக்குகளை கொண்டிருக்கும்.