குரூப் I தேர்வு அறிவிப்பு வெளியீடு, 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  மிகவும்  மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I தேர்வுக்கான செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

tnpsc, tnpsc group I 2020 exam, tnpsc group I 2020 exam date, tnpsc group 1 official notification
tnpsc, tnpsc group I 2020 exam, tnpsc group I 2020 exam date, tnpsc group 1 official notification

TNPSC 2020 Group I official Notification  Released : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  மிகவும்  மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான  குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாராவது ஓகே… ஜெயிப்பது எப்படி? – டிஎன்பிஎஸ்சிக்கு ரெடியாகும் முன் இதைப் படிங்க

குரூப் I, யுபிஎஸ்சி தேர்வர்களின் வருகையை சமாளிப்பார்களா குரூப் II தேர்வர்கள்?

இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் I தேர்வில் விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கல்வி தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் போன்ற அனைத்து தகவல்களையும்  டிஎன்பிஎஸ்சி வரும் நாட்களில் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் படும் என்று கூறியுள்ளது.  வழக்கத்தை போல, குரூப் I தேர்வு விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலம்  பெறப்படும் என்று நம்பப்படுகிறது.


ஆர்வமுள்ள தேர்வர்கள், tnpsc.exams.in , tnpsc.exams.net, tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் I 2019 தேர்வு 139 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் I தேர்வுமுறை:

பொதுவாக  குரூப் I தேர்வில் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று அடுக்குகளை கொண்டிருக்கும்.

குரூப் I முதல்நிலை தேர்வு
குரூப் I முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Group i 2020 exam notification released by tnpsc group i exam date syllabus and vacancies

Next Story
பெ…ரிய காத்திருப்பிற்கு பிறகு வெளியாகும் பெரியார் தேர்வு ரிசல்ட்Periyar University Result 2019, Periyar Maniammai University Result 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com