மெட்ராஸ் ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர் டி பிரதீப், ஜப்பானைச் சேர்ந்த Nikkei Asia பரிசுகள் 2020 அமைப்பின் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிக்கையின்படி, நானோ தொழில்நுட்பம் சார்ந்த நீர் சுத்திகரிப்பு துறையில் அவர் செய்த முன்னோடி பணிக்கு அங்கீகாரம் அளித்து அவருக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டது.
நானோ தொழில்நுட்பம் கொண்ட நீர் வடிப்பான்கள் ஒரு லிட்டருக்கு வெறும் 2 பைசா செலவில் சுத்தமான தண்ணீரை வழங்க உதவியது. “எனது மாணவர்களின் தீவிர அர்ப்பணிப்பு, நான் பணிபுரியும் ஐ.ஐ.டி மெட்ராஸின் சூழல், எனது நிதியுதவி செய்த நிறுவனங்கள் மற்றும் எனது நாடு ஆகியவை தான் எனது பணிக்கு முக்கிய காரணமாகும். எனது நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, ”என்று டி பிரதீப் கூறினார். இந்திய அரசு சமீபத்தில் அவருக்கு பத்மஸ்ரீ வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செமஸ்டர் தேர்வு மற்றும் கல்வி அட்டவணை: யுஜிசி அறிவுரைகள் என்னென்ன?
பேராசிரியரைப் பாராட்டிய ஐ.ஐ.டி-மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, “பேராசிரியர் பிரதீப் தனக்கும், தனது ஆய்வுக் குழுவிற்கும், நிறுவனத்திற்கும், நாட்டிற்கும் பெருமைகளைவழங்கியுள்ளார். அவரும் அவரது குழுவினரும் செய்த சிறந்த பணிகள் குறித்து நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.
அந்தந்த பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களித்த நபர்களுக்கு நிக்கி ஆசியா பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொருளாதார மற்றும் வணிக கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகிய மூன்று பிரிவுகளில் அவை ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வு : மீதமுள்ள தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ மும்முரம்
நிக்கி ஆசியா பரிசுகள் அதன் 25 வது ஆண்டில் நுழைந்துள்ளது, மேலும் 3 மில்லியன் யென் பரிசுத் தொகையும் இதில் அடங்கும். விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இறுதியில் டோக்கியோவில் நடைபெற உள்ளது.
முன்னதாக, PTFE பிளாஸ்டிக்கை சிதைவுறச் செய்ய முடியும் என்று இவரது தலைமையிலான குழு கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”