மதிப்புமிக்க அந்த மூன்று மணி நேரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கவனத்திற்கு

TNPSC Group4: “என் வாழ்நாள் முழுவதும் நான் சிலருக்கு முக்கியமானவராக இருக்க விரும்பிகிறேன்” என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை….

tnpsc press release, tnpsc group 4 selection list, tnpsc group 4 news,
tnpsc press release, tnpsc group 4 selection list, tnpsc group 4 news,

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருக்கிறது. சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணியோடு நிறைவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு, TNPSC Group 4 Exam: இறுதி நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

தெரிந்துக் கொள்ள வேண்டியவை:

இன்னும்  24 மணி நேரத்திற்குள் நடக்கும் அத்தேர்வின்  அடிப்படை சாராம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டிருந்திருப்பீர்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம்.

மிகவும் கட்டுக்கோப்பாக நடக்கும் தேர்வுகளில் டிஎன்பிஎஸ்சி  தேர்வும் ஒன்று. தேர்வறையில் தொலைபேசி, கைக்கடிகாரங்கள்,புளூடூத் சாதனங்களை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும்,விவரங்களுக்கு TNPSC Group 4 Exam: தேர்வறையில் நீங்கள் எதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது?

இத்தேர்வைப் பற்றி உங்கள் சுற்றத்தார்கள், நண்பர்கள் , வீட்டார்கள், ஏன்…… முன், பின் தெரியாதவர்கள் கூட உங்களுக்கு சில ஆலோசனைகளையும், சொல்லி இருப்பார்கள் . உண்மையில், சொல்லவேண்டும் என்றால் நம்மோடு சேர்ந்து நமது குடும்பமும் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

மேலும்,விவரங்களுக்கு TNPSC Group 4 Exam: தேர்வறையில் நீங்கள் எதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது?

அந்த மூன்று மணி நேரம்  ?   

நாளை பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எந்த வேறு பாடில்லாமல் எல்லோருக்கும் இருநூறு கேள்விகள் தான். ஆனால், பதில் எழுத போகும் நாம் வாழ்க்கையின் வெவ்வேறு  கோணங்களில் இருப்போம். எனவே, அந்த குரூப்-4 பந்தயம்  நாளை மூன்று நேரத்திற்குள் தான் ஆரம்பிக்கப் போகிறது, மூன்று மணி நேரத்திற்குள் அந்த பந்தயமும் முடிந்து விடப் போகிறது.

“இது எனது வாழ்கையின் கடைசி நிறுத்தம்-  நான் இப்போதே வெல்ல வேண்டும்” என்பது உங்கள் வார்த்தை என்றால் – நாளைஅந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

“இந்த கடனை என்னால் செலுத்த முடியும் “என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்

“நான் இன்னும் வேலைக்கு செல்லவில்லை”என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்

“அத்தை நான் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகிறேன். இதற்க நான் உத்தரவாதமும் தருகிறேன்.” என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்

“நான் இப்போதுதான் டிஎன்பிஎஸ்சி  தேர்வு எழுத ஆரம்பித்து இருக்கிறேன், அடுத்த வருடம் கண்டிப்பாய் பாஸ் செய்துவிடுவேன்”என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

TNPSC Group 4 : மனப்பாடம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

“எனக்கு எதுவமே தெரியாது, சும்மா அப்பளை மட்டும் செய்திருக்கிறேன்”என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்

“என் வாழ்நாள் முழுவதும் நான் சிலருக்கு முக்கியமானவராக இருக்க விரும்பிகிறேன்” என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

“எனக்குப் போதுமான பயிற்சி கிடைத்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்வது? ”என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை  அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

“என் மேலாளர் தேர்வுக்கு தயார் செய்ய எனக்கு எந்த உதவியும் கொடுக்கவில்லை. நான் என்ன செய்வது? ” என்பது உங்கள் வார்த்தை என்றால்- நாளை அந்த மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

மூன்று மணி நேரத்தை நேர்த்தியாக செலவிடுங்கள்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Motivational lines for tnpsc group 4 exam how to sucess tnpsc exam

Next Story
TNPSC Group 4 Exam: இறுதி நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்tnpsc group 4 merit list, tnpsc group 4 subject wise marks, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com