நீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றமா? என்ன சொல்கிறது என்.டி.ஏ
2020ம் ஆண்டு நீட் தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வரும் போலி சுற்றறிக்கைகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) கேட்டுக் கொண்டுள்ளது.
2020ம் ஆண்டு நீட் தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வரும் போலி சுற்றறிக்கைகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisment
இது தொடர்பாக என்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நீட் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தேர்வர்களுக்கு இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய தேர்வு முகமை பாடத்திட்டத்தை தீர்மானிக்கவில்லை, பாடத்திட்டத்திற்கான இணைப்பை மட்டுமே அது வழங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீட் தேர்விற்கான பாடத்திட்டம், மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள் பரவி வந்தது.
சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சுகாதார கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி நீட் தேர்வின் பாடத்திட்டங்களும், சேர்க்கையும் அமையும் . இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக, நீட் தேர்வு மே மாதம் இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான தேதி மற்றும் அட்மிட் கார்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 15ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 15.93 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), மற்றும் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை திருத்தும் வசதியை மீண்டும் தேசிய தேர்வு முகமை திறந்துள்ளது. திருத்தங்களைச் செய்ய விரும்புவோர், nta.ac.in அல்லது ntaneet.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லலாம்.