tnpsc group 1 notification 2020 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் I தேர்வுக்கான குறுகிய அறிவிப்பை கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட்டிருந்தது.
அதில், 2020ம் ஆண்டிற்கான குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும் என்றும், இதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று (ஜன.20) தொடங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisment
Advertisements
இதனால், இன்று தேர்வர்கள் குரூப் I தேர்வுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம்,மொத்த காலியிடங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய முழு நோட்டிபிகேஷனுக்காக காத்திருக்கின்றனர்.
குரூப் I 2019 தேர்வு 139 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று எந்த நேரத்திலும், குரூப் I தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கலாம். எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள், tnpsc.exams.in , tnpsc.exams.net, tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
முன்னதாக, பணியாளர் தேர்வாணையம் குரூப்-I தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சில அதிரடி மாற்றங்களை அறிவித்து இருந்தது.
History, Culture, Heritage and Socio–Political Movements in Tamil Nadu (தமிழ் சமூகத்தின் வரலாறு)
Development Administration in Tamil Nadu (தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம்)
என கூடுதலாக இரண்டு பிரிவுகள் இந்தாண்டு குரூப் – I முதல்நிலைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. கூடுதலாக இரண்டு பிரிவுகள் சேர்கப்பட்டுள்ளதால் குரூப் I முதல்நிலைத் தேர்வில் ஆப்டிடியூட் கேள்விகள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.