Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு, எவ்வாறு நடைபெற்றது?

சாதாரண பேனா மூலம் விடைத்தாளில் கேட்கப்படும் பதிவு எண், கையெழுத்து போன்றவைகளை நிரப்ப வேண்டும். மற்றொரு பேனாவின் மூலம் பதில்களை நிரப்ப வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc press release, tnpsc group 4 news ,

tnpsc press release, tnpsc group 4 news , tnpsc

குரூப் 4 தரவரிசைப் பட்டியல் ஒட்டு மொத்த மக்களையும்  அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. ஏனென்றல், இப்பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் (1606), கீழக்கரை (1608) ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் மாநில அளவில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றனர்.

Advertisment

செப்டம்பர் 1, 2019 அன்று நடத்தப்பட்ட குரூப்- IV சர்வீசஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மறையக் கூடிய சிறப்பு மையினாலான பேனா : 

இந்த வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு சிஐடி அதிகாரிகள், மறையக் கூடிய சிறப்பு மையினாலான பேனா மூலம் இந்த முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்திருக்கின்றனர்

இந்த 99 தேர்வர்களுக்கும்,தேர்வறைக்கு செல்லும்முன் இரண்டு பேனாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று சிறப்பு பேனா, மற்றொன்று சாதாரண பேனா. சாதாரண பேனா மூலம் விடைத்தாளில் கேட்கப்படும் பதிவு எண், கையெழுத்து போன்றவைகளை பூர்த்தி செய்திருக்கின்றனர். மற்றொரு பேனாவின் மூலம் கேள்வி பதில்களை பூர்த்தி செய்திருக்கின்றனர்.

நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு

இந்த சிறப்பு பேனா மையால் எழுதிய விடைகள் சில மணி நேரத்தில் மறைந்து விடும்.பிறகு, வட்டாச்சியர்கள் இந்த குறிப்பிட்ட விடைத்தாள்களை வேறொரு பத்திரமான  இடத்தில் வைத்து, மீண்டும் சாதாரன பேனாவால் சரியான விடைகள் நிரப்பியுள்ளனர்.

வட்டாசியர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ன் சரியான விடைகள் எப்படி தெரிகிறது என்று கேட்கிறீர்களா? தேர்வு தொடங்கிய சில நேரங்களிலே மூன்றாம் தரப்பினருக்கு இந்த வினாத்தாளின் நகலை அனுப்பிவிட்டு, சரியான விடைகளை பெற்றுள்ளனர். விடைத்தாள் பாதுகாப்பான இடத்திற்கு வருவதற்கு முன்பே இவர்களுக்கு சரியான பதில் கிடைப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

இந்த முறைகேட்டுக்காக, இந்த 99 தேர்வர்களிடம் 10 முதல் 12 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது.

Explained: கொரோனா வைரஸ் தடுக்க சர்ஜிகல் மாஸ்க் பயன்படுமா?

இந்த 99 பேரிடம் பணம் வாங்கியிருந்தாலும், போதிய நேரம் இல்லாமையால் 39  (இவர்கள் தான்  முதல் 100 இடத்தில் வந்தவர்கள் ) விடைத்தாள்களை மட்டும் திருத்தி அமைத்திருகின்றனர். மிச்சம் 61 பேர் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

குரூப் 4 தேர்வு மட்டும் இல்லாமல், அதற்கு முன் நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது தககவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முறைகேடு அரங்கேரியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உதாரணமாக, கடலூர், சிவகங்கை, தஞ்சாவூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக  இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment