Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வு: ஜனவரி மாத முக்கிய Current Affairs இங்கே.....

டிஎன்பிஎஸ்சி குரூப் I முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கான ஜனவரி மாத Current affairs சிலவற்றை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group I Exam, TNPSc Group I Exam Monthly Current Affairs

TNPSC Group I Exam, TNPSc Group I Exam Monthly Current Affairs

டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வு அறிவிப்ப சில நாட்களுக்கு முன்பு வெளியானது . துணை ஆட்சியர் உட்பட 69 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

Advertisment

முதல்நிலை தேர்வு - எப்ரல் ஐந்தாம் தேதி நடத்தப்படும். பிப்ரவரி 19ம் தேதி விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியாகும்.

குரூப் I முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கான கரண்ட் அப்பைர்ஸ் இங்கே:

2020-21 மத்திய பொது பட்ஜெட்டின் அச்சுப்பணிகள் அல்வா விழா : 

2020-21 மத்திய பொது பட்ஜெட்டுக்கான அச்சுப்பணிகள் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஜனவரி 19ம் தேதி காலை நார்த் பிளாக்கில் அல்வா விழா நடைபெற்றது.

Nirmala sithraman

அல்வா விழா:  

2020-21 மத்திய பொது பட்ஜெட் 2020 பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்காக பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் “பூட்டிய அறைக்குள்” இருப்பார்கள்.   நார்த் பிளாக் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் பட்ஜெட் அச்சகத்தில் அனைத்து அலுவலர்களும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இருப்பார்கள்.  மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகுதான், இந்த அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களின் உறவினர்களை சந்திக்க முடியும்.

மேலும், விவரங்களுக்கு: 

சிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு?

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா கொடுப்பது ஏன் என்று தெரியுமா ?

ஊழல் குறியீடு பட்டியல் :

ஊழல் குறியீடு பட்டியலில் (Corruption Perception Index ) இந்தியா இரண்டு இடங்கள் சறுக்கி 80 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. அதன் மதிப்பெண் 41 ஆகும்.

இந்த குறியீட்டை ஆண்டுதோறும் ஜெர்மனியை தளமாகக் கொண்ட டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அரசு அலுவலகங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு இந்த லிஸ்ட் தயாராகிறது.

இது ஒவ்வொரு நாட்டிற்கும் பூஜ்ஜியத்திலிருந்து (மிகவும் ஊழல் நிறைந்த) 100 வரை (மிகவும் சுத்தமாக) மதிப்பெண் அளிக்கிறது.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பத்ம விருதுகள் 2020 :

பத்ம விருதுகள் – நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

குணால் கம்ராவிற்கு தடை : பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தடை விதிக்கிறது?

இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மாதத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சம்பிரதாய விழாவில், குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்குவார்.

தமிழகத்தின் சார்பில்,  காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், ஆய்க்குடி அமா்சேவா சங்க நிறுவனா் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபா் வேணு சீனிவாசன், நாகசுர கலையில் சிறந்து விளங்கும் தம்பதியா் ஷேக் மகபூப் சுபானி, காலே ஷபி மகபூப், தனித்துவமான ஓவியா் மனோகா் தேவதாஸ், கா்நாடக இசைக்கலைஞா்களான பாம்பே சகோதரிகள் லலிதா மற்றும் சரோஜா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.

பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு: இந்தியா-மலேசியா வர்த்தகத்தின் இயக்கவியல் என்ன?

3-ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாடு:  

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3-ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டை பிரதமர் ஜனவரி 28ம் தேதி  காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முந்தைய இரண்டு உலக உருளைக்கிழங்கு மாநாடுகள் 1999 மற்றும் 2008ல் நடைபெற்றது. புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் இந்த கவுன்சிலுக்கு உட்பட்ட சிம்லாவில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மற்றும் பெரு நாட்டின் லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய உருளைக்கிழங்கு சங்கத்தால் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர், உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பங்கேற்று, வரும் நாட்களில் தேவைப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

ஆணையத்தின் பதவிக்காலத்தை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை (Sub-Categorization of OBCs) குறித்த பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை நீடிக்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆணையத்தின் தற்போதுள்ள விசாரணை வரம்புகளில் கூடுதலாக கீழ்க்காணும் விசாரணை வரம்பை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“iv. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் உள்ள புதிய இணைப்புகளை ஆய்வு செய்வது மற்றும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில் தவறுகள் இருந்தால் திருத்துவதற்குப் பரிந்துரைப்பது”.

பின்னணி:

அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆணையம் 2017 அக்டோபர் 2 அன்று அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. ஜி.ரோகிணி தலைமையிலான இந்த ஆணையம் 2017 அக்டோபர் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளைக் கொண்டுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையங்கள் ஆகியவற்றுடன் இது ஆலோசனை நடத்தியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதைய மத்திய பட்டியலில் காணப்படும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில் தவறுகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் தனது அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவை என ஆணையம் கருதியது. எனவே தனது பதவிக்காலத்தை 6 மாதத்திற்கு நீடிக்கவும், தற்போதுள்ள விசாரணை வரம்பை கூடுதலாக்கவும் கோரியது.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment